BREAKING NEWS:-
Search

RBS வங்கியின் நிகர லாபம் £952 மில்லியனாக உயர்வு!

ஸ்காட்லாந்து குரூப் ராயல் வங்கி மூன்றாவது காலாண்டு நிகர லாபம் சுமார் £896 மில்லியன் இருந்தது. ஆனால் தற்போது இதன் லாபம் £952 மில்லியனாக உயர்ந்து உள்ளது. 2008ம் ஆண்டு கணக்கின்படி அதனுடைய லாபம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஆனால் தற்போது 73% அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் மறுசீரமைப்பே ஆகும்.

இதற்கு மற்றொரு முக்கிய காரணம் அமெரிக்க குடிமக்கள். அந்த வங்கியின் மீது வைத்துள்ள நன்மதிப்பே ஆகும். முந்தைய பங்குகள் விற்பனைப்படி RBS வங்கியின் பங்கு 20.9% அதிகரித்துள்ளதாக தகவல் விவரம் தெரிவிக்கிறது.

தற்கால நிலவரப்படி இந்த வங்கியின் வளர்ச்சி வீதம் தனிப்பட்ட முறையில் 4.6% ஆகும். தற்போதுள்ள RBS வங்கி 1988-ம் ஆண்டு முதலே அமெரிக்க குடிமக்களின் மிக பெரிய பிராந்திய வங்கியாக செயல்பட்டு வருகிறது. அப்போதைய நிலவரப்படி சுமார் $440 மில்லியன் நிகர லாபம் அந்த வங்கிக்கு கிடைத்துள்ளது. குடிமக்கள் நிதிக்குழு RBS பங்குகளின் மீது சலுகையை தற்போது அளித்துள்ளதால் அதன் நிகர லாபம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.bbc.com/news/business-34674586.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *