BREAKING NEWS:-
Search

3D-யில் காது

Wake Forest University ஆராய்ச்சியாளர்கள் 3d bioprinting முறையினை பயன்படுத்தி பெரிய செயற்கை எலும்பு, குருத்தெலும்பு, மற்றும் தசை திசு உருவாக்கியுள்ளனர். இதேப் போல மனிதனின் பல்வேறு பாகங்களையும் இந்த 3d உதவி கொண்டு உருவாக்க முடியும் என்பதை ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.

தற்போது செயற்கை திசுக்களையும் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இதனை உருவாக்க பல ஜெல் போன்ற திசுக்களை 3d மூலம் உருவாக்கி அதனை மனித உடலில் செலுத்தும் அளவிற்கு விஞ்ஞானம் முன்னேறியுள்ளது. இந்த திசுக்களை மனித உடலில் இடமாற்ற முடியும் என்பதை நிரூபித்துள்ளனர். ஒருங்கிணைந்த திசு உறுப்பு 3d அச்சி அமைப்பு மூலம் எடுக்கப்பட்டு திசு பின்னல் ஒலி வடிவில் விட்டு அதனை கடினமாக்கி வெளி அச்சு மூலம் பிராணவாயு செல்களை உருவாக்க முடியும் என்பதை ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.

சிடி ஸ்கேன் அச்சிடுதல் தொடங்குவதற்கு முன்பு 3d மூலம் திசு நோயாளியின் உடலில் தேவைப்படும் சரியான வடிவத்தை அச்சிடுகின்றனர். ஆராய்ச்சியாளர்கள் குருத்தெலும்பு மற்றும் மென்மையான தசையினை  மனித உடலில் இருந்து எடுத்து பல வாரங்கள் சிகிச்சைக்கு பிறகு  செயற்கை திசு மூலம் காது வடிவத்தினை உருவாக்குகின்றனர். இந்த ஆய்வினை எலியினை கொண்டு சோதித்தனர். இந்த ஆய்வில் செயற்கை திசுக்களை எலியின் சொந்த திசுக்களில் ஒருங்கிணைந்து ஆய்வு மேற்கொண்டதில் அது வெற்றி பெற்றது. 3D-ல் அச்சிடப்பட்ட முறை நிலைத்திருக்கும். செயற்கை திசுக்களில் மற்ற தொழில் நுட்பங்களை விட உற்பத்தி திசுக்கள் அதிகமாக இருக்கின்றன. ஆராய்ச்சியாளர்கள் இன்னும் மனிதர்கள் மீது இந்த திசுக்களை சோதனை செய்யவில்லை.

http://www.popsci.com/3d-bioprinter-creates-big-stable-tissues

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *