BREAKING NEWS:-
Search

2018-ல் 5 வீடியோ கேம்களை அறிமுகப்படுத்த உள்ள சோனி நிறுவனம்..!

’போக்கிமேன் கோ’ வீடியோ கேமின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து ஜப்பானின் முன்னணி மின்னணு நிறுவனமான சோனியும், வீடியோ கேம் துறையில் மீண்டும் தனது கவனத்தை செலுத்தத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே பிளே ஸ்டேஷன் கருவி மூலமாக வீடியோ கேம் துறையில் புரட்சியை ஏற்படுத்திய அந்த நிறுவனம், கடந்த ஆண்டுடன் வீடியோ கேம்கள் தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்தது. ஆனால் தற்போது போக்கிமேன் கோ விளையாட்டின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் 2018-ஆம் ஆண்டு வீடியோ கேம் உலகில் சோனி களமிறங்க உள்ளது.

இதன்படி வரும் 2018-ஆம் ஆண்டு ஐந்து புதிய வீடியோ கேம்களை சோனி நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய கேம்கள் ஜப்பான் மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் முதலில் விற்பனைக்கு வரும். சோனி நிறுவனத்தின் வீடியோ கேம் பிரிவான பார்வர்ட் வொர்க்ஸ், இதற்கான விநியோகிஸ்தராக செயல்படும்.

2018-ஆம் ஆண்டு இந்த வீடியோ கேம்கள் முதலில் ஜப்பானிலும், அங்கு கிடைக்கும் வரவேற்பைத் தொடர்ந்து மற்ற பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும். ஆனால் இந்த வீடியோ கேம்கள் என்ன மாதிரியான சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் என்பது போன்ற தகவல்கள் அந்நிறுவனத்திடமிருந்து கிடைக்கவில்லை. போக்கிமேன் கோவைப் போல ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விளையாடப்படும் வீடியோ கேம்களை உருவாக்க சோனி நிறுவனம் கவனம் செலுத்தும் என கூறப்படுகிறது.

நன்றி:http://tech.firstpost.com/gaming/inspired-by-pokemon-go-sony-gears-up-to-launch-5-mobile-games-by-2018-341047.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *