BREAKING NEWS:-
Search

125 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர் இனம் கண்டுபிடிப்பு..!

125 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இயற்கை உண்ணி வகையைச் சேர்ந்த டைனோசர் எலும்புகளை விஞ்ஞானிகள்  தற்போது கண்டறிந்துள்ளனர். அந்த புதிய டைனோசர் இனத்தின் பெயர்  செளரோபாட்ஸ் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த டைனோசரின் கழுத்துப் பகுதி மிகவும் நீளமானது, கால்கள் உறுதியானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த நாற்பது ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட எலும்புகளைக் கொண்டு, இந்த டைனோசருக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டைனோசர்கள் தற்போதைய ஸ்பெயின் மற்றும் தான்சானியா பகுதிகளில் முன்னர் வாழ்ந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

இதற்கு முன்னர் நடத்தப்பட்ட ஆய்வில் மொபோசரஸ் உள்பட பல்வேறு வகையான டைனோசர்கள், கடும் வறட்சி காரணமாக அழிந்திருக்கலாம் எனவும் அந்த வறட்சியில் பிழைத்த மற்ற டைனோசர் வகைகள், இறந்து கிடந்த டைனோசர்களின் எலும்புகளை மிதித்து நொறுக்கியிருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

செளராபாட்ஸ் டைனோசர்கள் பெரும்பாலும் பெரிய மரங்கள், புல்வெளிகள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் அதிகம் உள்ள பகுதிகள் மட்டும் தான் வாழும். எனவே இவற்றின் எலும்புகள் கைப்பற்றப்பட்ட பகுதிகள், ஒரு காலத்தில் மிகவும் செழிப்பாக இருந்திருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நொறுங்கிய நிலையில் கிடைத்த எலும்புகள், காலப்போக்கில் நீரோடைகளால் அடித்து வரப்பட்டிருக்கலாம் என்பதால், செளராபாட்ஸ் டைனோசர்களுக்கு ஐரோப்பா,ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய பகுதிகளுடன் தொடர்பிருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *