BREAKING NEWS:-
Search

ஹெச்.ஐ.வி தடுப்பூசி சோதனை தொடங்கியது : 2020-இல் முடிவுகள் தெரியவரும்..!

ஏழு ஆண்டுகால ஆராய்ச்சிக்கு பிறகு தென்னாப்ரிக்காவில் ஹெச்.ஐ.வி தடுப்பூசிக்கான சோதனை துவங்கியுள்ளது. ”HVTN 702” என அழைக்கப்படும் இந்த தடுப்பூசியானது தென்னாப்ரிக்காவில் உள்ள 18 முதல் 35 வயதிற்குட்பட்ட சுமார் 5400 ஆண்கள் மற்றும் பெண்களுக்கு போடப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் முடிவுகள் ஆராயப்பட உள்ளன. இந்த தடுப்பூசிதான் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் திறன் வாய்ந்த தடுப்பூசி என கருதப்படுகிறது.

இந்த தடுப்பூசியானது ஹெச்.ஐ.வி வைரசிலிருந்து மனிதனை பாதுகாக்கும் என்பது உறுதி செய்யப்பட்டால், இன்னும் சில ஆண்டுகளில் புதிய எய்ட்ஸ் நோயாளிகளில் உருவாவதை முற்றிலும் தடுக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

HVTN 702 தடுப்பூசியானது தாய்லாந்தைச் சேர்ந்த ஒரு நபருக்கு போடப்பட்டு சுமார் 3.5 ஆண்டுகள் அந்த நபர் கண்காணிக்கப்பட்டார். இந்த ஆய்வின் முடிவில் ஹெச்.ஐ.வி வைரசிலிருந்து சுமார் 31.2 சதவீதம் அளவிற்கு இந்த தடுப்பூசி பாதுகாப்பளித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்தே மிகப்பெரிய அளவிலான சோதனை ஆய்வுக்கு தற்போது இந்த தடுப்பூசி உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சோதனையானது தென் ஆப்ரிக்காவில் உள்ள 15 பகுதிகளில் நடத்தப்பட உள்ளது. இந்த நாட்டில் ஒரு நாளைக்கு சுமார் 1000 பேர் ஹெச்.ஐ.வி தொற்றுக்கு ஆட்படுகின்றனர். இந்த சோதனைக்கு உட்படுத்தப்படும் நபர்களுக்கு ஆண்டுக்கு ஒரு தடுப்பூசி என மொத்தம் ஐந்து ஊசிகள் போடப்படும். இதன் இறுதி முடிவுகளானது வரும் 2020-ஆம் ஆண்டு வெளியாகும்.

நன்றி:http://tech.firstpost.com/news-analysis/hiv-vaccine-efficiacy-study-begins-in-south-africa-results-expected-in-2020-350037.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *