BREAKING NEWS:-
Search

வெறுக்கத்தக்க பேச்சு விவகாரம்-ஜெர்மனியில் முகநூலுக்கு வலுக்கும் எதிர்ப்பு..!

முகநூல் பக்கங்களில் பதியப்படும் தவறான பொய்ச் செய்திகள் மற்றும் வெறுக்கத்தக்க அவதூறு தகவல்களை நீக்க வேண்டும் என உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முகநூலுக்கு கோரிக்கைகள் எழுந்தன. மேலும் சில நாடுகள் வெறுக்கத்தக்க பேச்சுகளை உடனடியாக நீக்கவில்லை எனில் முகநூலுக்கு தடை விதிக்கப்படும் எனவும் எச்சரித்தன.

இதனை தொடர்ந்து கூடிய விரைவில் வெறுக்கத்தக்க பேச்சுகள் முகநூலில் இருந்து நீக்கப்படும் எனவும், அதற்கான சிறந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதாகவும் முகநூல் அறிவித்தது. இந்நிலையில் கூடிய விரைவில் தங்கள் நாடு குறித்த வெறுக்கத்தக்க பொய்ச் செய்திகளை நீக்காவிட்டால், முகநூலுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஜெர்மனி தெரிவித்துள்ளது.

வெறுக்கத்த பேச்சுகளால் ஜெர்மனி அரசியல்வாதிகள் பொறுமையை இழந்து வருவதாகவும், முகநூல் போன்ற நிறுவனங்கள் சட்டத்தை மதித்து நடக்கவில்லை என்றால் அபராதம் போன்ற பல சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும் எனவும் ஜெர்மனி தெரிவித்துள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க முகநூல் மறுத்துவிட்டது.

சமீபத்தில் ஜெர்மனி நாட்டிற்கு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இடம்பெயர்ந்த சுமார் ஒரு மில்லியன் மக்கள், அந்நாட்டு அரசால் அடக்குமுறைக்கு ஆளாவதாக பல பதிவுகள் முகநூலில் பதியப்பட்டன. இதுபோன்ற தவறான பொய்ச் செய்திகள் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுகள், அடுத்த ஆண்டு ஜெர்மனியில் நடைபெற உள்ள தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிர்ப்பை ஏற்படுத்தும் என அந்நாட்டு அரசியல்வாதிகள் அச்சப்படுகின்றனர்.

தங்களிடம் 1.6 பில்லியன் வாடிக்கையாளர்கள் இருப்பதாகவும், ஒவ்வொருவரையும் கண்காணித்து பதிவுகளை அழிப்பது சற்று சிரமமான காரியம் என ஏற்கனவே முகநூல் தெரிவித்துள்ளது. ஆனால் இதனை ஜெர்மனி ஆரசியல்வாதிகள் கேட்பதாக இல்லை.

சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, வெறுக்கத்தக்க பேச்சாக கருதப்படும் பதிவுகளில் 46 சதவீதம் முகநூலில் 24 மணி நேரத்தில் நீக்கப்படுவதாகவும், ஆனால் யு டியூப்பில் 10 சதவீதமும் டிவிட்டரில் ஒரு சதவீதமும்தான் 24 மணி நேரத்தில் நீக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

நன்றி:http://tech.firstpost.com/news-analysis/german-conservative-warns-facebook-to-crack-down-on-online-hate-speech-else-face-action-351839.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *