BREAKING NEWS:-
Search

வீட்டு காஸ் சிலிண்டருக்கு மானியம் ரத்து….

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, மாதந்தோறும், வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலையில், மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், வீடு மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கு என, இரண்டு வகை சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. தற்போது, மானியத்துடன் கூடிய, வீட்டு சிலிண்டரின் விலை 404.50 ரூபாய்; மானியம் அல்லாத சிலிண்டரின் விலை 749.50 ரூபாய்; வர்த்தக பயன்பாடு சிலிண்டரின் விலை 1,465 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.இதனால் வீட்டு சிலிண்டர் வாடிக்கையாளர்கள், தங்கள், ‘ஆதார்’ அட்டை எண்; வங்கி கணக்கு எண்களை, தங்கள் காஸ் ஏஜன்சியிடம் பதிவு செய்ய வேண்டும். ‘ஆதார்’ அட்டை இல்லாதவர், வங்கி கணக்கு எண்ணை தெரிவிக்க வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் காஸ் ஏஜன்சிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

தற்போது ‘ஆதார்’ எண் பதிவுக்கான விண்ணப்பம், காஸ் ஏஜன்சிகளில் வழங்கப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, ஏஜன்சியிடம் வழங்க வேண்டும். பின், ஏஜன்சி வழங்கும் விண்ணப்பத்தை, வங்கியில், கொடுத்து பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு, பதிவு செய்யப்பட்ட பின், வீட்டு சிலிண்டருக்கான மானியம் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட இருக்கிறது. பின், வாடிக்கையாளர்கள், சிலிண்டருக்கான முழு பணத்தை கொடுத்து, ஏஜன்சிகளிடம், சிலிண்டர் பெற வேண்டும்.

இம்மாதத்திற்குள் காஸ் ஏஜன்சிகள், வாடிக்கையாளரின், ‘ஆதார்’ அல்லது வங்கி கணக்கு எண் பதிவை, உடனடியாக துவக்கி, முடிக்குமாறு எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. ‘ஆதார்’ அட்டையை உடனடியாக பதிவு செய்ய எண்ணெய் நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளது. இதனால் வீட்டு உபயோக, காஸ் சிலிண்டருக்கான மானியம், ஜனவரி மாதத்தில் ரத்து செய்யப்படும் என்று தெரிகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *