BREAKING NEWS:-
Search

விவசாயிகளுக்கு உதவ  மஹீந்திராவின் இணையதளம்

கடினமாக  உழைக்கும் விவசாயிகள் தங்களுடைய  நிலங்களில் கடினமாக உழைத்து தங்களுடைய குடும்பம் மற்றும் சமுதாயத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல பெரிதும் உதவியாக இருந்து வருகிறார்கள். இந்திய நாட்டின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கு, விவசாயத்தை நம்பியே உள்ளது. இந்திய பொருளாதாரத்தின் முதுகெழும்பாக விவசாயம் இருந்தபோதிலும் அரசாங்கம் போதிய நிதி வசதிகளை விவசாயிகளுக்கு செய்து தருவதே இல்லை. இந்திய விவசாயிகள் அதிகாலையிலேயே எழுந்து கடும் வெயிலில் நிலத்தில் உழைத்து சூரியன் மறையும் போதுதான் வீட்டிற்கு திரும்புகிறார்கள். நாட்டின் கடின உழைப்பாளிகளாக திகழும் விவசாயிகள் தங்களுடைய இரத்தம் மற்றும் வியர்வையை சிந்தி நிலத்தில் உழைத்தாலும் சரியாக இலாபம் கிடைக்கததால் விவசாயிகள் வாழ்க்கை வாழ பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்வதை நினைத்தால் நமக்கு கண்ணீர்தான் வருகிறது. இந்த நிலை தற்காலத்திலும் தொடர்ந்து கொண்டேதான் வருகிறது. அவர்களை கைப்பிடித்து தூக்கி வாழ்க்கையில் வளம் பெற செய்பவர்கள் இன்றளவும் இல்லை என்பது உண்மையே. இவர்களுடைய அழுகுறல் கடவுளிற்கு கூட கேட்கவே இல்லை.

தற்போது இந்த விவசாயிகளின் பிரச்சனையை தீர்ப்பதற்காக மஹீந்திரா & மஹீந்திரா நிறுவனம் ஒரு புதிய முயற்சியினை துவங்க உள்ளது. இந் நிறுவனம் 365 நாட்களிலும் விவசாயிகளுக்கு நன்மை பயக்க புதிய சமூக ஆன்லைன் (Ceod the Rice) தளத்தை துவக்கி உள்ளது. இந்த தளத்தின் முக்கிய நோக்கம் விவசாயிகளுக்கு நிதியை திரட்டுவதே ஆகும். இந்நிறுவனம் 5 இலாப திட்டங்களுக்காக நிதியினை திரட்ட உள்ளதாக கூறி உள்ளது. தற்போது மஹீந்திரா உருவாக்கி உள்ள இணையதளத்தில் விவசாயிகள் இலாபம் பெற வேண்டும் என்ற நோக்கில் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. முக்கியமாக இவர்களுடைய இணையதளம், பாசன வசதியினை ஏற்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு உதவி புரிந்து, அவர்கள் நிலையான வருமானம் பெறுவதுடன், விவசாயிகளின் மகள் / மகன் கல்வி பயிலுவதற்கான நிதி வசதியினையும் திரட்ட உள்ளதாக கூறி உள்ளது. தற்போது இந்நிறுவனம் கொண்டுவந்துள்ள இந்த இணையதள சேவை கண்டிப்பாக விவசாயிகளின் வருங்காலம் ஒளிமயமானதாக மாற்றம் அடையும் என்று கூறப்படுகிறது.

http://www.firstpost.com/business/economy/sponsored-seedtherise-for-our-farmers-today-so-that-they-can-reap-a-better-tomorrow-2493168.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *