BREAKING NEWS:-
Search

விளையாட்டு போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ள அமேசான் நிறுவனம்..!

பிரபல இணையதள வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனம், எந்த பொருளையும் விட்டுவைக்காமல் தனது வியாபார வட்டத்தை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட குறிப்பிட்ட சில அமெரிக்க நகரங்களில் மளிகை பொருட்களை விற்கும் திட்டத்தையும் துவங்கியுள்ளது.

இந்நிலையில் முக்கிய விளையாட்டுப் போட்டிகளை தனது இணையதளம் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யும் புதிய திட்டத்தை அமேசான் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதற்காக அமெரிக்காவின் பிரபல விளையாட்டுத் தொடர்களின் நிர்வாகிகளிடம், நேரடி ஒளிபரப்பு உரிமையை பெறுவதற்கான பேச்சுவார்த்தையில் அமேசான் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நேரடி ஒளிப்பரப்பிற்காக பல்வேறு வகையான கட்டணங்களை அந்த நிறுவனம் நிர்ணயிக்கலாம் எனவும், தனது இணையதளம் மூலம் பொருட்கள் வாங்குபவர்களுக்கு இந்த கட்டணத்தில் சலுகையும் வழங்கலாம் எனவும் கூறப்படுகிறது.

அமேசான் போன்ற மற்றொரு அமெரிக்க இணைய வர்த்தக நிறுவனமான ”பிரைம்”, 99 அமெரிக்க டாலர்கள் கட்டணத்தில் முக்கிய விளையாட்டுத் தொடர்களை நேரலையாக அளித்து வருகிறது. இதனை மனதில் கொண்டுதான் அமேசான் நிறுவனமும் இந்த புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.

தொலைக்காட்சி, கேபிள் வசதி ஆகியவற்றை தவிர்த்து இணையதளம் மூலமாக நேரடி ஒளிபரப்புகளை மக்கள் பார்க்க விரும்புவதால் இந்த நடவடிக்கையை அமேசான் எடுத்து வருகிறது. இப்போதைக்கு அமெரிக்காவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டித் தொடர்களில்தான் அமேசான் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. ஒருவேளை அமெரிக்காவில் அமேசான் நிறுவனம் இந்த நேரலை வசதியை துவக்கினால், எதிர்காலத்தில் இந்தியாவில் நடைபெறும் விளையாட்டுத் தொடர்களை நேரலை செய்ய பிளிப்கார்ட் நிறுவனம் கூட திட்டம் தீட்டலாம்.

பிரபல சமூக வலைத்தளங்களான முகநூல் மற்றும் டிவிட்டர் ஆகிய நிறுவனங்கள் முறையே என்.எஃப்.எல் மற்றும் என்.பி.ஏ ஆகிய அமெரிக்க விளையாட்டுத் தொடர்களை ஏற்கனவே நேரலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

நன்றி:http://www.news18.com/news/tech/amazon-to-enter-live-sports-streaming-1314363.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *