BREAKING NEWS:-
Search

விமான ஜன்னல்கள் ஏன் வட்ட வடிவமாக இருக்கின்றன?

விமானத்தின் ஜன்னல்கள் எப்போதும் வட்டவடிவமாகவோ அல்லது நீள்வட்ட வடிவமாகவோதான் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் அவை அந்த வடிவம் தவிர வேறு எந்த வடிவத்திலும், வடிவமைக்கப்படுவதில்லை. இதற்கு காரணம் காற்றழுத்தம் தான்.

1949-ஆம் ஆண்டு ’டி ஹவிலண்ட் காமெட்’ என்ற பயணிகள் விமானம் தனது விமான சேவையை துவங்கியது. ஆனால் விமான சேவை துவங்கப்பட்ட ஒரு ஆண்டுக்குள் அந்த நிறுவனத்தின் இரண்டு விமானங்கள் நடு வானிலேயே வெடித்துச் சிதறி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்து குறித்த உண்மையை அறிய விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு அளித்த அறிக்கையின்படி காமெட் விமானத்தின் ஜன்னல்கள் சதுர வடிவமாக வடிவமைக்கப்பட்டதே விபத்துக்கு காரணம் என தெரிய வந்தது.

பயணிகள் விமானங்கள் தரையிலிருந்து 30,000 அடி உயரத்தில் வானில் பறக்கும் போது, அந்த உயரத்தில் காற்றின் அடர்த்தியானது மிகவும் குறைவாக இருக்கும். இதன் காரணமாக காற்று நிலைப்புத் தன்மையானது குறைந்துவிடும். இதனால் விமானத்திற்குள் பயணிகள் சுவாசிப்பதற்காக காற்றின் அழுத்தமானது அதிகமாக இருக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதனால் விமானத்திற்கு உள்ளே ஒரு விதமான காற்றழுத்தமும், விமானத்திற்கு வெளியே வேறு விதமான காற்றழுத்தமும் நிலவுகிறது. இந்த காற்றழுத்த வேறுபாடானது மிக அதிக அளவில் இருக்கும். எனவே வெளியே இருக்கும் காற்றானது, விமானத்திற்குள் நுழைய கடும் முயற்சி செய்யும்.

சதுர வடிவிலான ஜன்னலில் நான்கு முனைகள் இருப்பதால், காற்றழுத்த வேறுபாடுகள் காரணமாக இவை உடையக் கூடியதற்கான சாத்தியம் அதிகம். இதே போல் காற்றழுத்த வேறுபாட்டு பிரச்சனையில் காமெட் விமானங்களின் சதுர வடிவ ஜன்னல்கள் உடைந்ததால்தான், அவை விபத்துக்குள்ளாகின.

எனவேதான் எந்த பலவீனமான முனைகளும் இல்லாத அளவிற்கு விமானங்களின் ஜன்னல்கள் வட்ட வடிவமாகவோ, நீள்வட்ட வடிவமாகவோ வடிவமைக்கப்படுகின்றன.

நன்றி:http://www.mensxp.com/special-features/today/29228-airplane-windows-are-always-round-and-never-square-do-you-know-why.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *