BREAKING NEWS:-
Search

விண்வெளியில் இருப்பதால் வீரர்களின் கண் பார்வைத் திறன் குறைகிறதாம்..!

அதிக நாட்கள் விண்வெளியில் இருப்பதால், விண்வெளியில் இருக்கும் வீரர்களின் மூளை மற்றும் முதுகுத் தண்டுவடம் ஆகியவற்றை சுற்றி உள்ள திரவத்தின் அளவு குறைவதாகவும், இதனால் விண்வெளி வீரர்களுக்கு கண் பார்வைத் திறன் குறைய வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

”ரேடியாலஜிகல் சொசைட்டி ஆஃப் நார்த் அமெரிக்கா” என்ற பெயரில் சமீபத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் இது குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்ட நாசா விண்வெளி நிறுவனத்தின் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள், விண்வெளிக்கு சென்று வந்த பிறகு விண்வெளி வீரர்கள் பார்வை குறைப்பாட்டால் தடுமாறுவதை ஒத்துக் கொண்டுள்ளனர்.

விண்வெளிக்கு செல்வதனால் உடல் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள், கருவிழிகள் மற்றும் ஆப்டிக் நரம்புகளின் தலைப்பகுதியில் ஏற்படும் வீக்கம் ஆகியவை விண்வெளி வீரர்களின் கண் பார்வைத் திறனை குறைப்பதாக தெரிவிக்கப்படுள்ளது. இந்த குறைபாடு “visual impairment intracranial pressure (VIIP)” என அழைக்கப்படுகிறது. சர்வதேச விண்வெளி மையத்தில் அதிக நாட்கள் தங்கியிருந்த மூன்றில்,இரண்டு வீரர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் விண்வெளி வீரர்களிடம் இந்த குறைபாடு கண்டறியப்பட்டு வருவதாகவும், விண்வெளிக்கு செல்வதால் உடலியல் அமைப்பில் ஏற்படும் மாற்றங்களை, பூமிக்கு திரும்பியதும் மீண்டும் சரிசெய்ய முடியாது என்பதால் இதற்கு தீர்வு இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மனிதனின் மூளை மற்றும் தண்டுவடத்தை சுற்றி ”செரப்ரோஸ்பினல்” என்ற திரவம் உள்ளது. இந்த திரவம் மனித மூளை மற்றும் தண்டுவடத்திற்கு ஒரு மெத்தை போல செயல்படுகிறது. மேலும் ஊட்டச்சத்துக்களை கடத்தவும், கழிவுப் பொருட்களை வெளியேற்றவும் இந்த திரவம் உதவுகிறது. பூமியில் இருக்கும் அழுத்தத்தை சமாளிக்கும் அளவிற்கே இந்த திரவத்தின் தன்மை உள்ளது. ஆனால் விண்வெளியில் உள்ள அழுத்தத்தை இந்த திரவத்தால் சமாளிக்க முடிவதில்லை என்பதால் அதன் அமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால்தான் விண்வெளி வீரர்களுக்கு பார்வைக் குறைபாடு ஏற்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.

நன்றி:http://tech.firstpost.com/news-analysis/astronauts-suffer-visual-impairment-because-of-changes-in-cerebrospinal-fluid-volume-350056.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *