BREAKING NEWS:-
Search

விண்வெளியிலிருந்து இணைய வசதியை அளிக்க ஸ்பேஸ் எக்ஸ் திட்டம்..!

தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ’ஸ்பேஸ் எக்ஸ்’, விண்வெளியிலிருந்து உலகம் முழுவதும் இணையவசதியை அளிப்பதற்கான செயற்கைகோளை ஏவ அமெரிக்க அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது.

ஏற்கனவே ஸ்பேஸ் எக்ஸ் போல சில நிறுவனங்கள் இதே போன்ற வசதியை அளிப்பதற்காக அமெரிக்க அரசிடம் விண்ணப்பத்துள்ளன. ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்திய ராக்கெட் வெடித்துச் சிதறியதால், தனது நிறுவனத்தின் பங்குதாரர்களை தக்க வைப்பதற்காக இந்த புதிய திட்டத்தை ஸ்பேஸ் எக்ஸ் கையில் எடுத்துள்ளது.

புவியிலிருந்து சுமார் 1,110 கி.மீட்டர் தொலைவில் இந்த வசதிக்காக செயற்கைகோளை நிலைநிறுத்த உள்ளதாக அந்நிறுவனம் தனது விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்திற்காக சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகை செலவிடப்படும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பரில் 62 மில்லியன் செலவில் உருவாக்கப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கான் 9 ராக்கெட், இஸ்ரேல் நாட்டின் 200 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் வழியில் வெடித்துச் சிதறியது. இந்த சம்பவம் விண்வெளி ஆராய்ச்சித் துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது போல தனியார் நிறுவனங்களுக்கு விண்வெளி ஆராய்ச்சியில் அதிக வாய்ப்புகளை அளித்தால், அது பெரும் அசம்பாவிதத்தில் சென்று முடியும் என பலர் கருத்து தெரிவித்திருந்தனர். எனவே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயற்கைக்கோள் மூலம் இணைய வசதியை அளிக்கும் திட்டத்திற்கு அமெரிக்க அரசு அனுமதி அளிக்குமா? என்பது சந்தேகமாக உள்ளது.

நன்றி:http://www.bbc.com/news/technology-38012930

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

 

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்…




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *