BREAKING NEWS:-
Search

விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு :  நுண் துளைகளை  கொண்ட திரவம்

இந்த வாரம் வெளிவந்த நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய திரவத்தை கண்டறிந்துள்ளதாகவும், இந்த திரவ மூலக்கூறுகள் Y வடிவ ஓட்டைகளுடன் இருப்பதாக அறிவித்துள்ளனர். பஞ்சானது திரவம் போன்று ஓடினால் எப்படி இருக்குமோ அவ்வாறு அந்த புதிய திரவம் உள்ளது என்று அந்த ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

“நிரந்தர துளைகள் அல்லது நுண்துளைகளை கொண்ட பொருட்கள் தொழில் நுட்ப ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். இவை பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து பெட்ரோல் உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகின்றன. எனினும் இந்த நுண்ணிய துகள்களை உடைய திரவம் இதற்கு முன்னர் திடநிலையில்  இருந்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அவர்கள் இந்த சிறப்பு தன்மை மிக்க திரவத்தின் வடிவமைப்பை ஆராயும் போது திரவ மூலக்கூறுகளுக்கிடையே இடைவெளி இருப்பதை கண்டறிந்தனர். இதற்கு காரணம் இந்த திரவத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு எரிவாயு கலந்து இருக்கின்றன என்று இந்த ஆய்வின் இணை ஆசிரியரான “ஸ்டுவர்ட் ஜேம்ஸ், ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

2 (1)

இந்த திரவத்தை இரசாயன செயல்முறையில் சோதனை செய்ய இன்னும் பல ஆண்டுகள் தேவை என்று ஜேம்ஸ் கூறுகிறார். ஆனால் இது நம்பமுடியாத ஒரு நுண்ணிய திரவ கண்டுபிடிப்பின் முதல் படி என்றும் அவர் கூறியுள்ளார்.

http://www.popsci.com/scientists-invent-liquid-with-permanent-holes

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *