BREAKING NEWS:-
Search

வாழையில் எர்வினியா கிழங்கு அழுகல்நோய்

நுண்ணுயிர் கிருமியான பாக்டீரியா (எர்வினியா கரட்டோவோரா) வாழையில் கிழங்கு அழுகல் நோய் ஏற்படுவதற்கு முக்கிய நோய்க்காரணியாக உள்ளது. இந்த நோயின் தாக்கம் திசுவளர்ப்பு வாழையில் (ஜி 9 ) அதிகமாக காணப்படுகிறது.
கிழங்கு அழுகல் தாக்கப்பட்ட வாழையின் நடுக்குருத்து அழுகி வளர்ச்சி குறையும். அதற்கு சற்று முன்னால் தோன்றிய இலை தண்டு பகுதியினுள் சொருகியது போன்று காணப்படும். நோய் தாக்கப்பட்ட மரத்தினை காய்த்த தண்டுப்பகுதி கிழங்கிலிருந்து பிரிந்து கீழே விழும். கிழங்கு மட்டும் மண்ணிலேயே இருக்கும். கிழங்கானது அழுகி “”பார்மலின்” நாற்றத்தைக் கொண்டிருக்கும்.
நோய் மேலாண்மை
: நடவு செய்வதற்கு தேவையான வாழைக்கன்றுகளை நோய் தாக்கப்படாத தோட்டங்களிலிருந்து தேர்வு செய்ய வேண்டும். மக்கிய தொழு உரம், வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை நிலத்தில் இட்டு மண்ணின் வளத்தை மேம்படுத்த வேண்டும். கோடைக்காலத்தில் 3 முதல் 4 முறை நீர்ப்பாய்ச்சியும் குளிர் காலத்தில் நீர் தேங்காதவாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். சணப்பை ஊடுபயிராக வளர்ந்து வாழை பூப்பதற்கு முன் உழுது விட வேண்டும்.
இரண்டு முதல் 5 மாதம் வரை மாதம் ஒருமுறை பிளீச்சிங் பவுடர் 2 முதல் 6 கிராம் வீதம் மண்ணில் இட்டு நீர்பாய்ச்ச வேண்டும். வாழைக்கன்றை காப்பர்ஆக்ஸி குளோரைடு 4 கிராம் / லிட்டர் ஸ்ட்ரெப்டோசைக்ளின் 0.3 கிராம் / லிட்டர் வீதம் அதாவது
காலையில் 45 நிமிடம் வரை ஊறவைத்து அதன் பின்பு நடவு செய்ய வேண்டும். இதே கலவையை நடவு செய்த முதல் மாதம் கழித்து கிழங்கினைச் சுற்றி ஊற்ற வேண்டும்.
பருவ காலத்தில் உயிர்க்கட்டுப்பாட்டு காரணியான சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் கரைசலை 3 முறை வாழைக்கு அளிக்க வேண்டும். வாழை நடவு செய்த பின், ஒரு வாழைக்கன்றுக்கு நுண்ணுயிர் கட்டுப்பாட்டு காரணியான டிரைக்கோடெர்மா விரிடி 50 கிராம் வீதம் நடவு செய்த 2 மம் 4
மாதங்களுக்கு பின்பு இட வேண்டும். (தகவல் : முனைவர் செ.தங்கேஸ்வரி, முனைவர்
எஸ்.கே.மனோரஞ்சிதம், தென்னை ஆராய்ச்சி நிலையம், ஆழியார் நகர், பொள்ளாச்சி. போன்: 04253 – 288 722).




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *