BREAKING NEWS:-
Search

வாத்துக்களை விரட்ட தானியங்கி விமானம்

கனடாவின் தலைநகரான ஒட்டாவா நகரின் கடற்கரையில் ஏராளமான வாத்துக்கள் சுற்றித் திரிகின்றன. வாத்துகளின் கழிவுகளால் நகரில் துர்நாற்றம் ஏற்படுவதோடு, அங்குள்ள மக்களுக்கு பெரும் தொல்லை ஏற்பட்டு வந்தது.

இவற்றை விரட்ட பயிற்சி பெற்ற நாய்கள், அதிக சத்தம் ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளை பயன்படுத்தினர். மேலும் ஒருவித துர்நாற்றம் ஏற்படுத்தக்கூடிய வேதிப்பொருளும் அங்கே தெளிக்கப்பட்டது. ஆனால் வாத்துக்களை விரட்ட முடியவில்லை. இந்த வாத்துக்களின் தொல்லையால் அங்குள்ள புகழ்பெற்ற ‘பெட்டி’ கடற்கரை 13 நாட்கள் மூடப்பட்டது. எனவே இந்த வாத்துக்களை விரட்டுவதற்காக ‘ரிமோட்’ மூலம் இயங்கும் சிறிய ரக ஆளில்லா விமானம் தயாரிக்கப்பட்டது. சுமார் 26 அங்குல அகலம் கொண்ட இந்த விமானம் தினமும் காலையில் கடற்கரையை சுற்றி வந்து, அங்கு சுற்றித்திரியும் வாத்துக்களை நகரின் கிழக்குப்பகுதிக்கு விரட்டி வருகிறது. இந்த முறையால் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *