BREAKING NEWS:-
Search

வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் அதிகரிப்பு!

பூமியில் காணப்படும் பழமையான விண்வெளி தூசி வளிமண்டலத்தில் முன்னர் இருந்ததைவிட அதிக அக்ஸிஜன் இருப்பதை காட்டுவதாக ஆய்வறிக்கை கூறுகிறது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 100,000 மடங்கு குறைவான ஆக்ஸிஜனே வளிமண்டலத்தில் இருந்தது. ஆனால் தற்போது இது பன்மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது. ஆக்ஸிஜன் வளிமண்டலத்தில் உள்ள மற்ற மூலக்கூறுகளுடன் வினைப் புரிந்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கிறது.

இந்த மாற்றம் கடந்த 2.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த பெரும் ஆக்ஸைடு நிகழ்வால் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பூமியில் நுண்ணுயிரிகள், தாவரங்கள் மூலம் ஆக்ஸிஜன் கிடைக்கிறது. அதிலும் தாவரங்கள் photosynthesize மூலம் ஆக்ஸிஜனை வெளிவிடுகிறது. இதனை பற்றி மேலும் விரிவாக ஆய்வு செய்ய ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் Pilbara பகுதியில் சேகரிக்கப்பட்ட 60 நுண்ணிய விண்கற்களை ஆய்வு செய்ததில் மனித முடி அகலத்தை விட மெல்லிய இரண்டு மடங்கு விண்கற்கள் கிடைத்துள்ளது. இதன்படி பார்த்தால் வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள அதிகப்படியான ஆக்ஸிஜனே இதற்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் விண்கற்களில் அதிக இரும்பு ஆக்ஸைடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரும்பு ஆக்ஸைடு அதிக அளவு இருப்பதற்கு காரணம் ஆக்ஸிஜனே ஆகும். இந்த ஆக்ஸிஜன் அதிகரிப்பிற்கு காரணம் அதிகப்படியான நீராவி போக்கும் காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அது மட்டுமல்லாது எரிமலைகளில் இருந்து வெளியாகும் கந்தக-டை-ஆக்ஸைடும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

http://www.livescience.com/54716-space-dust-reveals-clues-ancient-earth-atmosphere.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *