BREAKING NEWS:-
Search

ரியோ ஒலிம்பிக்கிற்காக கூகுளின் புதிய வசதிகள்..!

வரும் ஐந்தாம் தேதி உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் துவங்க உள்ளன. பல்லாயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ளும் இந்த போட்டியை காண்பதற்காக உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும் விளையாட்டு ரசிகர்கள் ரியோ டி ஜெனிரோ நகரை முற்றுகையிட்டு வருகின்றனர். ஆனால் செலவு செய்து ரியோ டி ஜெனிரோ நகருக்கு செல்ல முடியாதவர்கள் என்ன செய்வார்கள்? கவலை வேண்டாம். அவர்களுக்காக உதவி செய்ய காத்திருக்கிறது கூகுள். தனது பயனாளர்களுக்காக ஒலிம்பிக்கின் ஓவ்வொரு நொடியையும் விரல் நுனியில் கொண்டு வருவதற்காக பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.

ரியோ ஒலிம்பிக்கின் போட்டி அட்டவணைகள், பதக்கங்களின் எண்ணிக்கை, வீரர், வீராங்கனைகள் குறித்த தகவல்களை கூகுள், போட்டி முடிவுகள், 30க்கும் மேற்பட்ட நாடுகளின் தொலைக்காட்சி சேனல்களில் ரியோ ஒலிம்பிக் போட்டிகள் ஒளிபரப்பாக உள்ள நேர அட்டவணையை என பல தகவல்களை கூகுள் தர இருக்கிறது. இந்த தகவல்களை பெற நீங்கள் உங்களுக்கு தேவையானவற்றை கூகுளில் தட்டச்சு செய்தாலே போதும்.

இதுதவிர 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் யு டியூப் மூலமாக ரியோ போட்டிகளின் முக்கிய தருணங்கள் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. மேலும் யு டியூப் மூலமாக ரியோ ஒலிம்பிக் போட்டிகள் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட உள்ளன. இதற்காகவே சிறந்த 15 வல்லுநர்களை ரியோ டி ஜெனிரோவுக்கு கூகுள் நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது.

ரியோ டி ஜெனிரோவுக்கு நேரடியாக செல்ல முடியாதவர்கள், கூகுள் மேப்பின் Street View வசதி மூலம் அந்நாட்டின் ஓவ்வொரு இடங்களை 360 டிகிரி புகைப்படங்களை கண்டு ரசிக்க முடியும். இதற்கெனவே Google Street View Trekkers ரியோ நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் உலகம் முழுவதும் உள்ள தனது பயனாளர்களுக்காக, ரியோ ஒலிம்பிக்கின் வழிகாட்டியாகவே மாற தயாராகிவிட்டது கூகுள் நிறுவனம்.

நன்றி:https://googleblog.blogspot.in/2016/08/let-google-be-your-guide-to-rio-de.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *