BREAKING NEWS:-
Search

ராமநாதபுரம் அருகே பரிதாபம் கடலில் மூழ்கி 5 பெண்கள் பலி

ராமநாதபுரம் அருகே நரிப்பையூர் கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பெண்கள் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை எற்படுத்தி உள்ளது.

தெற்கு நரிப்பையூர் கடலில் காலையில் நேர்த்திக்கடன் செலுத்த சென்ற பெண்கள் மதிய உணவையும் பள்ளிவாசல் வளாகத்திலேயே சமைத்து சாப்பிட்டுவிட்டு, அதன் பின்னர் கடலில் குளிக்க குழந்தைகளை தவிர்த்து பெண்கள் மட்டும் கடற்கரைக்கு சென்றுள்ளனர். அப்போது ஒரு பெரிய அலை வந்து அந்த பெண்களையும் அடித்து சென்றது. இதனை கண்ட குழந்தைகள் செய்வதறியாது சதம் போட அருகில் இருந்த மீனவர்கள் வேகமாக வந்து அந்த பெண்களை மீட்டனர். ஆனால் அந்த பெண்களும் அலையல் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த சாயல்குடி காவல்துறையினர், கடலில் உயிரிழந்த 5 பேரின் சடலங்களை கடலாடி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதில் நரிப்பையூர் சீனி ஆவுல் மனைவி செய்யது காதர்பீவி (40), மகள் அராபத் (20), முகம்மது ரபிக் மனைவி சீனி பசரியா (39), மகள் இஸ்மத் (18), முஸ்தாக் மனைவி ரமீலா (23) ஆகியோர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். இறந்த செய்யது காதர் பீவியும், சீனி பசரியாவும் உடன் பிறந்த சகோதரிகள்.

இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *