BREAKING NEWS:-
Search

ரஷ்ய வங்கியில் சைபர் தாக்குதல் மூலம் $31 மில்லியன் பணம் திருட்டு..!

ரஷ்யாவில் செயல்பட்டு வரும் ரஷ்யன் சென்ட்ரல் வங்கியின் மீது சைபர் தாக்குதல் நடத்தியுள்ள ஹேக்கர்கள், அந்த வங்கியின் சேமிப்பு கணக்குகளிலிருந்து சுமார் 31 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பணத்தை திருடியுள்ளனர். ஏற்கனவே இந்த வங்கியில் 5 மில்லியன் ரூபிள்களை திருட ஹேக்கர்கள் முயற்சி செய்த சம்பவமும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்ட்ரல் வங்கியின் வாடிக்கையாளர்களின் பொய்த் தகவல்களை அளித்து இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹேக்கர்கள் மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதால், வங்கிகள் தங்களின் இணையப் பாதுகாப்பு வசதிகளை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என சமீபத்தில்தான் தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரித்திருந்தனர். ஆனால் இதனை கவனத்தில் கொள்ளாத வங்கிகளை குறி வைத்து ஹேக்கர்கள் பணத்தை திருடி வருகின்றனர்.

சைபர் தாக்குதல் நடத்தப்பட்ட பல வங்கிகள், இது குறித்த தகவலை வெளியில் தெரிவித்தால் வாடிக்கையாளர்களிடம் தங்கள் நன்மதிப்பு கெட்டுவிடும் என நினைக்கின்றன. இதனால் பல சைபர் தாக்குதல்கள் குறித்த தகவல்கள் வெளியில் வருவதில்லை.

கடந்த பிப்ரவரி மாதம் கூட அமெரிக்காவின் பெடரல் வங்கியில் உள்ள வங்காளதேசத்தின் சென்ட்ரல் வங்கிக் கணக்கிலிருந்து சைபர் தாக்குதல் மூலம் 81 மில்லியன் அமெரிக்க டாலர்கள் திருடப்பட்டது நினைவிருக்கலாம். இது போன்ற சைபர் தாக்குதல்களை நடத்தும் ஹேக்கர்களை பிடிக்க, பல நாடுகளின் சட்டத்துறை அதிகாரிகள் முயற்சி செய்து வந்தாலும், பெரிய அளவில் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:http://tech.firstpost.com/news-analysis/russian-central-bank-loses-31-million-in-cyber-attack-351112.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *