BREAKING NEWS:-
Search

மேரியோ விளையாட்டு விரைவில் திறன்பேசியில் அறிமுகம்..!

சில காலம் முன்னர் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீடியோ கேம் விளையாடாத ஆட்களே இல்லை எனலாம். அதிலும் குறிப்பாக ”மேரியோ” என்ற விளையாட்டில் நாம் அனைவரும் ஏதோ ஒரு தருணத்தில் விளையாடி இருப்போம். ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப விளையாட்டு கேம்களும் மேம்பட்டதால், மேரியோ விளையாட்டை விளையாடுவதற்கான வாய்ப்பு யாருக்கும் தற்போது கிடைப்பதில்லை.

இந்நிலையில் பிரபல “போக்கிமான் கோ” திறன்பேசி விளையாட்டை உருவாக்கிய நிண்டென்டோ நிறுவனம், திறன்பேசிகளில் விரைவில் மேரியோ விளையாட்டை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. ”சூப்பர் மேரியோ ரன்” என பெயரிடப்பட்டுள்ள இந்த விளையாட்டு, ஐ.ஓ.எஸ் 8.0 இயங்குதளம் உள்ள திறன்பேசிகளில் வரும் டிசம்பர் 15-ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதனை தொடர்ந்து ஆன்ட்ராய்டு இணையதளங்களிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சுமார் 151 நாடுகளில் இதன் பயன்பாட்டை பெற முடியும் எனவும் நிண்டெண்டோ தெரிவித்துள்ளது.

இந்த விளையாட்டில் ஆங்கிலம், பிரெஞ்ச், மாண்டரீன், ரஷ்யன் உள்ளிட்ட உலகின் முன்னணி மொழிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 660 ரூபாய் செலுத்தி இந்த விளையாட்டை திறன்பேசியில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட காலம் வரை மட்டும் இந்த விளையாட்டை இலவசமாக விளையாடும் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது.

பழைய மேரியோ விளையாட்டின் அனைத்து அம்சங்களும் இந்த புதிய ’சூப்பர் மேரியோ ரன்’ விளையாட்டில் உள்ளது. முன்னர் பொத்தான்கள் மூலம் விளையாடிவர்கள், இனி தொடு திரை மூலமாக இந்த விளையாட்டை விளையாட வேண்டும். அவ்வளவுதான் வித்தியாசம். இந்தியாவிலும் இந்த விளையாட்டை வரும் டிசம்பர் 15-ஆம் தேதி முதல் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:http://tech.firstpost.com/news-analysis/super-mario-run-will-be-available-on-ios-from-15-december-across-151-countries-347711.html

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *