BREAKING NEWS:-
Search

”மேக் இன் இந்தியா” திட்டத்தை எதிர்த்து சீனா மிரட்டல்..!

சீனா தயாரிப்பு செல்பேசிகளை விட, ’மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் செல்பேசிகளுக்கு இந்திய அரசு முக்கியத்துவம் அளித்தால், அதற்கான பலனை இந்திய அரசு கூடிய விரைவில் அறிவிக்கும் என சீனா மிரட்டல் விடுத்துள்ளது. சீன அரசின் அதிகாரப்பூர்வ ஊடகம் வெளியிட்டுள்ள செய்திகள், ’இந்தியாவின் இது போன்ற செயல்பாடுகளுக்கு பீஜிங் சரியான பதிலடி அளிக்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

”சீன தயாரிப்புகளுக்கு இந்திய மக்களிடம் இருக்கும் ஆர்வத்தை, இந்திய அரசு தடுக்க நினைத்தால் சீனா அரசு அமைதியாக பார்த்துக் கொண்டு இருக்காது. சர்வதேச போட்டியில், தனது நாட்டு நிறுவனங்களை இந்தியா பாதுகாக்க நினைத்தால், அதற்கேற்றவாறு பதில் நடவடிக்கைகளை சீனா எடுக்கும். இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தக ஒப்பந்தங்களின்படி, இருநாட்டு வர்த்தகங்களை மேம்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமே தவிர, டெல்லிக்கும் பீஜிங்கிற்கு இடையே வியாபார போரை இந்தியா ஊக்குவிக்க கூடாது” என அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”இந்தியாவிலுள்ள வரி விதிப்பு கட்டமைப்பை சீரமைக்காமல், இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் தொழிற்சாலைகள் அமைக்க கடந்த சில ஆண்டுகளாக மோடி ஊக்குவித்து வருகிறார். தற்போதைக்கு இந்தியாவில் அதிகம் முதலீடு செய்துள்ள வெளிநாடுகளில் சீனா முதலிடம் வகிக்கிறது. வெளிநாடுகளின் உதவி இல்லாமல், இந்தியாவின் தொழிற்துறையை வளர்க்க முடியாது.” எனவும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஹுவாய் டெக்னாலஜிஸ் உட்பட சீனாவின் சில முன்னணி மின்னணு நிறுவங்கள், தங்கள் நிறுவனத்தின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக இந்தியாவில் தொழிற்சாலைகளை அமைக்க உள்ளதாக அறிவித்திருந்தன. இதனால் சீன தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகள் இந்தியா தொழிலாளர்களுக்கு கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனை எதிர்த்தே இது போன்ற ஒரு கருத்தை சீனா வெளியிட்டுள்ளது.

நன்றி:
http://tech.firstpost.com/news-analysis/china-warns-india-about-make-in-india-could-take-countermeasures-372354.html




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *