BREAKING NEWS:-
Search

மூட்டைப்பூச்சி விவகாரம் கோர்ட்டுக்கு செல்கிறது

கனடா நாட்டில் குயிபிக் நகரிலுள்ள ஒரு ஓட்டலில் லாரெண்ட் அசோலாய் என்பவர் அறை எடுத்துத் தங்கினார். அந்த அறையில் மூட்டைப்பூச்சி தொல்லை தாங்க முடியவில்லை. சில மூட்டைப் பூச்சியைப் பிடித்து சென்று நிவாகியிடம் காண்பித்து புகார் தெரிவித்தார். அதனால் 40 டாலர் தருகிறோம் வேறு லாட்ஜிக்கு சென்று தங்கலாம் என கூறி விட்டனர்.

ஆனால் அதை ஏற்க மறுத்த லாரெண்ட் மூட்டைப்பூச்சி கடியையும் தாங்கி கொண்டு இரவு முழுவதையும் அதே அறையில் கழித்தார். இந்த ஆத்திரத்தில் அவர் இணையதள சுற்றுலா வலைதளத்தில் அந்த ஓட்டல் குறித்து கடும் கிண்டல் வைமர்சனத்தை பதிவு செய்தார். இதை கேள்விப்பட்ட ஓட்டல் நிர்வாகம் அதை அகற்றும் படி கேட்டும் அவர் மறுத்து விட்டார். இதனால் ஓட்டல் நிர்வாகம் தங்களது வர்த்தகத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக கூறி, ரூ.60 லட்சம் இழப்பீடு கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடுத்து இருக்கிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *