BREAKING NEWS:-
Search

மீனாட்சி அம்மன் கோயிலில்  ஓசோன் படலம் பற்றிய செய்தியா!

தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த 4-ம் தேதியன்று சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் வனத்துறை அமைப்பிடம் ஓசோனில் ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றிய சர்வதேச பிரச்சனைக்கு புதிய தீர்வினை கூறியுள்ளது நம்மை வியப்பால் ஆழ்த்தி உள்ளது. ஏனென்றால் இந்தியாவில் 700க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பே  ஓசோன் படலத்தை பற்றிய அனைத்து செய்திகளும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இடம்பெற்றுள்ளது என்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாதான் ஓசோன் படலத்தை பற்றிய ஆதாரம் வைத்துள்ள முதல் நாடாகும். ஏறத்தால 700-ஆண்டுகளுக்கு முன்னரே மீனாட்சி அம்மன் கோயிலில் ”பூகோள சக்கரம்” பற்றிய படமும் இடம்பெற்றுள்ளது என்று NGT தலைவர் சுவதேந்தர் குமார் தலைமையிலான தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த 4-ம் தேதியன்று தகவலறிக்கையை வெளியிட்டுள்ளது. இதனை பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமெனில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று பாருங்கள் என்றும் அவர் கூறினார். கோயிலில் உள்ள “பூகோள சக்கரத்தில்” பூமியின் மேலே 15 முதல் 30 கீ. மீ தூரத்தில் ஓசோன் படலம் அமைந்துள்ளது பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளதாம்.

3

அது மட்டுமல்லாது ஓசோன் படலத்தை எப்படி பாதுகாப்பது என்பது பற்றிய வழிமுறைகள் அதில் கூறப்பட்டு இருக்கிறதாம். ஓசோன் படலத்தை பற்றிய பிரச்சனைக்காக நவம்பர் 4-ம் தேதியன்று வழக்கறிஞர் எம்.சி. மேத்தா மனுதாரராக ஆஜராகி HFC மட்டும் ஓசோன் படலத்தை பாதிப்பதில்லை. அதற்கு மேலாக பல காரணங்கள் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இதனைப் பற்றி மேலும் விரிவாக தெரிந்துகொள்ள வேண்டுமானால் நீங்கள் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று பாருங்கள் என்றும் கூறி உள்ளார்.

பெரும்பாலும் ஓசோன் படலம் பாதிப்பு HFC-யின் காரணமாக சூரியன் உமிழப்படும் கேடுவிளைவிக்கும் B புற ஊதா கதிர்களிளால் சேதம் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. இதுமட்டும் இதற்கு காரணம் அல்ல. மேலும் குளோரின், புரோமின் இரசாயன வெளியீடுகளும் இந்த பாதிப்பிற்கு காரணமாகும்.

http://www.indianfrontliners.com/article/22353-visit-meenakshi-temple-to-study-ozone-layer/82-notice-board

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *