BREAKING NEWS:-
Search

மருத்துவ வசதிகளுக்காக இந்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ள புதிய குறுஞ்செயலி..!

மேப் இந்தியா மற்றும் விசிட் இணைய சேவை நிறுவனம் ஆகியவை இணைந்து மத்திய அரசின் மருத்துவ உதவிகளுக்கான “ஸ்வஸ்தா பாரத் எம்-ஹெல்த்” என்ற புதிய குறுஞ்செயலியை உருவாக்க உள்ளன. இந்த குறுஞ்செயலிக்கான வரைபட உதவியை இந்த நிறுவனங்கள் அளிக்க இருக்கின்றன.

இந்த குறுஞ்செயலியை தரவிறக்கம் செய்த பின்னர், ஏதேனும் அவசர மருத்துவ சேவைகளுக்கு அருகிலுள்ள மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸை அழைக்க முடியும். அருகிலுள்ள மருத்துவமனைகள், ஆய்வுக்கூடங்கள், மருந்துக்கடைகள் ஆகியவற்றை அறிய முடியும். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைகளை குறுஞ்செய்தி வடிவிலோ, காணொலி காட்சிகள் மூலமாகவோ பெற முடியும். குறிப்பாக கிராமப்புறங்கள், இரண்டாம் கட்ட நகரங்கள் ஆகியவற்றுக்கு இந்த குறுஞ்செயலியில் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.

”இந்த குறுஞ்செயலியில் உள்ள ஜி.பி.எஸ் மற்றும் வரைபட உதவி மூலம், குறுஞ்செயலி வாயிலாக ஒரே அழைப்பில் ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவ உதவிகள், மருத்துவரின் ஆலோசனைகள் ஆகியவற்றை பெற முடியும். அருகிலுள்ள மருந்தகங்களில் கூட, குறுஞ்செயலி வாயிலாக மருந்துகளுக்காக பதிவு செய்து கொள்ள முடியும்.” என மேப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த குறுஞ்செயலி வாயிலாக மக்கள் கேட்கும் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்காக ஒவ்வொரு பகுதிகளிலும் மருத்துவ உதவியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பார். மக்களின் சந்தேகங்களை நேரலையில் நிவர்த்தி செய்வதற்கான வசதிகளை, விசிட் நிறுவனம் அளிக்க உள்ளது.

அந்த மருத்துவ உதவியாளர் குறுஞ்செயலி வாயிலாகவே நோய்களுக்கான அறிகுறிகள், மருத்துவ முதலுதவிகள், வீட்டு மருத்துவம் ஆகியவை குறித்து கூட ஆலோசனை அளிப்பார். இது மட்டுமல்லாமல், சமீபத்தில் மக்களால் இந்த குறுஞ்செயலி வாயிலாக அதிகம் கேட்கப்பட்ட கேள்விகள், நோய்கள் குறித்தும் கூட அறிந்து கொள்ள முடியுமாம்.

நன்றி:

http://tech.firstpost.com/news-analysis/mapmyindia-has-teamed-with-visit-internet-to-launch-swastha-bharat-m-app-372176.html




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *