BREAKING NEWS:-
Search

மருத்துவத்திற்கான நோபல் பரிசை பெற்றார் ஜப்பானிய விஞ்ஞானி..!

வேதியியல் விஞ்ஞானியான ஆஃல்பிரட் நோபல் என்பவரால் உலகின் தலை சிறந்த அறிஞர்களுக்கு ஆறு துறைகளின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு, ஸ்வீடன் தலைநகரான ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும்.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் விபரங்கள் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று மருத்துவத்திற்கான நோபல் பரிசானது அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் “யோஷினேரி ஓஷிமி” தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நம் உடலில் உள்ள செல்கள் நோய்வாய்ப்படும் போது, தன்னைத் தானே அழித்துக் கொள்வது மட்டுமின்றி, மறுசுழற்சி மூலம் மீண்டும் தன்னை புதுப்பித்துக் கொள்ளும். இத்தகைய செல்கள் எப்படி செயல்படுகின்றன? என்பது குறித்த ஆய்வில் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளதால் பேராசிரியர் யோஷினரி ஓஷிமி நோபல் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆட்டோபேஜி என அழைக்கப்படும் இந்த துறையின் மூலமாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்களை கண்டறிந்து, அவை தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்வதற்கான ஆற்றலை அளிக்கும் போது, புற்றுநோய் குணமாகும் வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் இளம்வயதிலேயே பார்கின்சன் மற்றும் டைப்-2 நீரிழிவு நோயை ஏற்படுத்தும் செல்கள் குறித்தும் ஆட்டோபேஜி துறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 1960-ஆம் ஆண்டே ஆட்டோபேஜி துறை அறிமுகமாகிவிட்டாலும், தற்போது தான் அசுர வேகத்தில் வளர்ச்சி பெற்று வருகிறது.

நன்றி”: https://www.nobelprize.org/nobel_prizes/medicine/laureates/2016/press.html?ctkey=autophagy

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *