BREAKING NEWS:-
Search

போயிங், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன விண்கலன்களை உதவிக்கு அழைக்கும் நாசா..!

சர்வதேச விண்வெளி நிலையங்களில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால், விண்வெளி வீரர்கள் உடனடியாக பூமிக்கு திரும்ப ஆபத்துகால விண்கலன்களை நிறுத்தி வைக்க நாசா முடிவெடுத்துள்ளது. தற்போது வரை சர்வதேச விண்வெளி நிலையத்தில் எந்த பிரச்சனையும் இல்லாவிட்டாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதனை செய்ய நாசா விரும்புகிறது.

விண்வெளிக்கு அனுப்பப்படும் வீரர்கள், பல்வேறு உடல் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டாலும், அவர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டால், சிகிச்சைக்காக பூமிக்கு திரும்ப இது போன்ற உதவி விண்கலன்கள் தேவை என நாசா தெரிவித்துள்ளது.

தற்போதைக்கு ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் ஆபத்துகால விண்கலமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் போயிங் ஆகிய தனியார் நிறுவனங்களின் விண்கல தயாரிப்பை, நாசா உற்று கவனித்து வருகிறது. தற்போது சி.எஸ்.டி-100 என்ற விண்கலத்தை போயிங் நிறுவனத்தை, க்ரூ டிராகன் என்ற விண்கலத்தை ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனமும் தயாரித்து, சோதித்து வருகின்றன.

இந்நிலையில் தங்களுக்கு  தேவையான தொழில்நுட்பத்துடன்  இந்த விண்கலன்களை தயாரிக்க, நாசாவின் ஒரு குழு அந்த இரண்டு நிறுவனங்களும் ஆலோசனை அளித்து வருகிறது. தற்போதைக்கு இந்த விண்கலன்களை, சர்வதேச விண்வெளி நிலையத்தில் பிரச்சனைகள் ஏற்படும் போது, அதனை சரி செய்யும் நேரத்தில் மற்ற விண்வெளி வீரர்கள் ஓய்வெடுக்கும் இடமாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் எதிர்காலத்தில் அவற்றை ஆபத்து கால விண்கலன்களாக விண்வெளி மையத்தின் அருகில் நிலைநிறுத்தலாம் எனவும் நாசா திட்டமிட்டு வருகிறது.

நன்றி:

http://tech.firstpost.com/news-analysis/nasa-wants-to-use-spacecraft-from-boeing-and-spacex-as-lifeboats-for-the-international-space-station-372821.html




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *