BREAKING NEWS:-
Search

பொது இடத்தில் திறன்பேசிக்கு சார்ஜ் செய்தால் சைபர் தாக்குதலில் சிக்க வாய்ப்புகள் அதிகமாம்..!

பொது இடங்கள் மற்றும் கணினியில் யூ.எஸ்.பி கேபிள் மூலமாக செல்பேசியை சார்ஜ் செய்பவர் நீங்கள் என்றால், உங்கள் செல்பேசியிலுள்ள தகவல்கள் திருடப்பட வாய்ப்புகள் அதிகம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

ஒரு நபர் தனது திறன்பேசியை பொது இடங்களிலோ அல்லது கணினியிலோ, யு.எஸ்.பி கேபிள் மூலம் சார்ஜ் செய்யும் போது, “சைட் சிக்னல்” என்ற தொழில்நுட்பம் மூலம், திறன்பேசியில் பயன்படுத்தப்பட்ட இணையதள விபரங்களை ஹேக்கர்கள் பெற முடியும். மேலும் திறன்பேசியில் உள்ள முக்கிய தகவல்களையும் வேறு இடத்திற்கு கடத்த முடியும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

விமான நிலையம் போன்ற பொது இடங்களில், சார்ஜ் செய்யும் இடங்களை பார்த்ததுமே பலர் தங்கள் திறன் பேசிகளை சார்ஜ் செய்யத் துவங்கி விடுகின்றனர். ஆனால் தங்கள் திறன்பேசிகளை பிரச்சனையில் சிக்க வைக்கிறோம் என்பது  அவர்களில் பலருக்கு தெரிவதில்லை.

ஒருவர் தனது  திறன்பேசி மூலம் வங்கிக் கணக்குகள்,பணப் பரிமாற்றங்களை கையாளுபவர் என வைத்துக் கொள்வோம். அவரின் திறன் பேசி  இது போல சைடு சிக்னல் மோசடியில் சிக்கிக் கொண்டால், அவரின் வங்கிக் கணக்கிலிருந்து ஹேக்கர்கள் பணத்தை திருட வாய்ப்புகள் அதிகம்.

எனவே பொது இடங்கள் மற்றும் கணினியில் யு.எஸ்.பி கேபிள் மூலம் சார்ஜ் செய்ய வேண்டிய சூழல் இருந்தால், திறன்பேசியில் இணைய உலவிகளை பயன்படுத்த வேண்டாம் என விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *