BREAKING NEWS:-
Search

பெல்ஜியம் ஜி.பி. பார்முலா 1 கார் பந்தயத்தில் ஹாமில்டன் வெற்றி

பெல்ஜிய நாட்டில் பார்முலா 1 கார் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. துவக்கத்தில் இருந்து முன்னணியில் இருந்த மெர்சிடஸ் அணியின் லூயிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்றார். மெர்சிடஸ் அணியின் நிகோ ரோஸ்பர்க் இரண்டாமிடம் பிடித்தார். ரோமெய்ன் குரோஸ்ஜீனுக்கு மூன்றாம் இடம் கிடைத்தது. முன்னாள் உலக சாம்பியன் செபாஸ்டியன் வெட்டலின் கார் டயர், பந்தயத்தின் இறுதிக்கட்டத்தில் வெடித்ததால் குரோஸ்ஜீனால் மூன்றாமிடத்துக்கு முன்னேற முடிந்தது. இந்த சீசனில் 6 கிராண்ட் பிரிக்ஸ் வெற்றிகளைப் பெற்றுள்ளார் ஹாமில்டன்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *