BREAKING NEWS:-
Search

பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம் வருகிறது

ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி செவ்வாய் கோளின் அற்புதமான மேகங்கள், குழிகள், பனித்தொப்பிகள் மற்றும் பிற அம்சங்களை படம் பிடித்துக்காட்டியுள்ளது. ஹப்பிள் இந்த புகைப்படத்தை விண்ணில் 50 மில்லியன் மைல் தூரத்திலிருந்து எடுத்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய மாறுதல் இன்று இரவு  நடக்க உள்ளது. அது என்னவென்றால் செவ்வாய் சூரியனுக்கு எதிர்பக்கம் வரப்போகிறது.

இந்தக்காட்சியினை அரேபியா, டெர்ரா மற்றும் தெற்கு துருவ பகுதிகளில் நன்றாக தெரியும். தற்போது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் செவ்வாய் கோள் பற்றிய புதியப்படத்தினை வெளியிட்டுள்ளது. அதில் மே 19-ம் தேதி செவ்வாய் கிரகம் வழக்கத்திற்குமாறாக பெரிய அளவில் பிரகாசமான தோற்றத்தில் இருந்தது காட்டப்பட்டுள்ளது. இதைப்பார்க்கும் போது பூமியை போன்ற கட்டமைப்பு பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த செவ்வாய் கிரகம் வரும் மே 30-ம் தேதி அன்று பூமிக்கு மிக அருகில் 46.8 மில்லியன் மைல்கள் தூரத்தில் வர உள்ளது. இதற்கு முன்பு 2003-ல்  பூமியிலிருந்து 34.65 மில்லியன் மைல்கள் தூரத்தில் வந்தது. இரண்டு கிரகங்களும் 60,000 ஆண்டுகளுக்கு முன்பு நெருங்கி இருந்திருக்கிறது என்பது இந்த படத்தின் மூலம் தெரிந்துள்ளது. ஹப்பிள் எடுத்த படத்தில் இருண்ட பகுதிகளில் பண்டைய எரிமலைக்குழம்பு வெளியேற்றமும், எரிமலை அம்சங்களாக இருந்தது பாறைப்படுகைகளாக மாறியுள்ளது .

http://www.livescience.com/54818-mars-opposition-amazing-hubble-photo.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *