BREAKING NEWS:-
Search

புதிய ரூபாய் நோட்டுகளுக்கு சில்லறை தரும் இணையதளம்..!

கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கை காரணமாக 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளுக்கு நாட்டில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வயதானோர், உடல் நலிவுற்றோரால் பல மணி நேரம் காத்திருந்து ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்க முடிவதில்லை. அப்படியே எடுத்தாலும் பெரும்பாலான இடங்களில் 2000 ரூபாய் நோட்டுகள்தான் கிடைக்கின்றன. இதனால் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கு கூட பலர் சில்லறை நோட்டுகள் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் டில்லியைச் சேர்ந்த ’tailmil.com’ என்ற இணையதளம் சில்லறை நோட்டுகளை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே சென்று அளித்து வருகிறது. நொய்டாவில் செயல்பட்டு வரும் பிரபல உணப்பொருட்கள் விற்பனை நிறுவனமான ‘TWF’ என்ற மாவு விற்பனையகத்துடன் இணைந்து இந்த சேவையை tailmil.com இணையதளம் செயல்படுத்தி வருகிறது.

”கடந்த மாதம் ரூபாய் நோட்டு மதிப்பு குறைக்கப்பட்ட நாளிலிருந்து அடுத்த 10 முதல் 15 நாட்களில் எங்களிடம் பொருள் வாங்கிய வாடிக்கையாளர்கள் கொடுத்த செல்லக்கூடிய பணம் எங்களிடம் இருந்தது. அதனைத்தான் எங்களிடம் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சில்லறையாக அளித்து வருகிறோம். இந்த சலுகையை பெற எங்கள் இணையதளத்திற்கு சென்று ஏதாவது ஒரு பொருளுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு, புது ரூபாய் நோட்டுக்கான தேவையையும் தெரிவிக்கலாம்.

நாங்கள் இப்போதைக்கு ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு நாளுக்கு அதிகபட்சமாக 1000 ரூபாய்க்கு மட்டுமே சில்லறை அளித்து வருகிறோம். எங்கள் இணையதளத்தில் 1000 ரூபாய்க்கு மேல் பொருள் வாங்குபவர்களுக்கு மட்டுமே இந்த வசதியை நாங்கள் அளித்து வருகிறோம்.” என tailmil.com இணையதள நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

1000 ரூபாய்க்கான சில்லறையாக இரண்டு 500 ரூபாய் தாள்கள் அல்லது பத்து நூறு ரூபாய் தாள்கள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு எவ்வளவு 500 ரூபாய் அல்லது 100 ரூபாய் வேண்டும் என்பதையும் இணையதளத்திலேயே தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். இந்த வசதி தற்போதைக்கு நொய்டாவில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

நன்றி:http://tech.firstpost.com/news-analysis/demonetisation-startup-in-noida-is-delivering-cash-with-every-order-350728.html?utm_source=top_stories

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *