BREAKING NEWS:-
Search

புதிய நெல் ரகம் “திருப்பதி சாரம் 5′

புதிய நெல் ரகம் “திருப்பதி சாரம் 5′ : தமிழகத்தில் தென் மாவட்டங்களில் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த இரகம் கார் பிந்தய பாசனப் பருவங்களில் பயிரிட ஏற்றது. இந்த இரகம் ஒரு எக்டருக்கு சராசரியாக 6300 கிலோ விளைச்சலைத் தருகிறது. ஏற்கனவே வெளியிடப்பட்டு பயன்பாட்டில் உள்ள அம்பை 16 இரகத்தை விட 14 விழுக்காடு அதிக விளைச்சலைத் தரும். விதைத்த 118 நாட்களில் அறுவடைக்கு தயாராகும் இந்த இரகம் தண்டு துளைப்பான், இலை சுருட்டுப்புழு புகையான் ஆகிய பூச்சிகளுக்கு மிதமாக எதிர்ப்புத்திறன் கொண்டது. இந்த இரகத்தின் அரிசி குறுகிய வடிவில் தடிமனானது. அமைலோஸ் அரிசியில் இடைப்பட்ட நிலையில் உள்ளதால் சமைக்க உகந்தது. மேலும் நல்ல அறவைத்திறன் கொண்டது. நாமக்கல் மாவட்டத்தில் சோதனை முறையில் பயிரிடப்பட்ட போது 11,567 கிலோ விளைச்சலைத் தந்துள்ளது. மேலும் விபரங்களுக்கு தொடர்பு முகவரி: இயக்குநர், பயிர்பெருக்க மரபியல் மையம், த.வே.பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003. போன்: 0422 – 661 1215.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *