BREAKING NEWS:-
Search

புதிய தங்க திட்டங்கள் அறிமுகம்

புதிய தங்க திட்டங்கள் முதலீடு செய்யும் திட்டத்தை பிரதமர் மோடி நவம்பர் 5-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த முதலீடு இந்திய குடும்பங்கள் திருமணம், பண்டிகை காலக் கட்டத்தில் அவர்களுக்கு உதவும் வகையில் இருக்கும் என்று கூறினார். இந்த தங்க திட்டத்தில் நான்கு புதிய முறைகளை அவர் புகுத்தி உள்ளார். அவை தங்கம் பணமாக்கும் திட்டம், Gold Overeign பத்திர திட்டம், தங்கநாணயம் திட்டம், தங்க பொன் திட்டம் போன்றவைகளாகும்.

2

இத்திட்டங்களில் முதலீடு செய்தால் அது மிகவும் பாதுகாப்பானதாகவும், பின்னர் காலங்களில் இது மிகவும் உதவியாகவும் இருக்கும் என்று கூறினார்.

தங்கம் பணமாக்கும் திட்டத்தின் பயன்கள்:

தங்கம் பணமாக்க திட்டத்தில் முதலீடு செய்தால் நீங்கள் சுமார் 2.50% வட்டி விகிதம் வரை சம்பாதிக்க முடியும். நீண்டகால அரசாங்க வைப்பு மீதான வட்டி விகிதம் ரிசர்வ் வங்கி அறிவிப்பின் படி 2.25% மற்றும் 2.20 ஆகும். வைப்பு முறை மூன்று ஆண்டுகளில் மூன்று வகையான Short Term உள்ளது. இந்த வைப்பு திட்டமானது 5 முதல் 7 ஆண்டுகள் குறைந்தது, அதிகமாக 11 முதல் 15 ஆண்டுகள் வரை நீண்டகால திட்டமாக உள்ளது.

இந்திய தங்க நாணய திட்டம்

இந்திய தங்க நாணய திட்டத்தின் கீழ், நாணயங்கள் 5 மற்றும் 10 கிராம் வைப்பு திட்டம், 5 கிராம் நாணயம் சுமார் 15000 பெற்று கொள்ளலாம். 10 கிராம் நாணயத்தில் 20000 நாணயம் வரை மற்றும் 3750 Gold Bulfions MMT Coutlets மூலம் பெற்று சேமிக்கும் படி திட்டம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நாணயங்களை எளிதாக மறுசுழற்சி செய்து கொள்ளலாம்.

Soverghn Gold பத்திர திட்டம்

இந்த பத்திர திட்டத்தில் சேருவதற்கு November 5 முதல் 20 வரை விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்திற்கான பத்திரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

இத்திட்டத்தில் சேருவதற்கான தகுதிகள்:

மேற்கண்ட  திட்டங்களில் சேரும் நபர்கள் கண்டிப்பாக இந்தியாவில் உள்ள குடிமக்களாக இருக்க வேண்டும். ஒரே நபரின் பெயரிலோ (அ) குழந்தைகளுக்கும் இத்திட்டத்தில் பங்கு கொள்ள அனுமதி உண்டு. முதலீடு செய்ததற்கான முதலீட்டு பத்திரம் வழங்கப்படும்.

ஆண்டிற்கான வட்டி விகிதம்:

இந்திய ரிசர்வ் வங்கியினால் நிர்ணயிக்கப்பட்ட 2.75% வட்டி விகிதம் ஆண்டிற்கு வழங்கப்படும். தங்க பத்திரத்திற்கான நாணய திட்டத்திற்கு நிலையான தொகையான Rs. 2,684. இந்த தொகையினை ஒவ்வொரு அரையாண்டிற்கும் ஒருமுறை வழங்கப்படும். உங்களுக்கு இத்தொகை தேவை இல்லை எனில் இத்திட்டத்தின் முதிர்வு ஆண்டுகள் வரையிலும் விட்டுவிட்டால் அதற்கான வட்டியும் நீங்கள் பெற்றுகொள்ளலாம்.

வரி விகிதங்கள்:

தங்க பத்திரங்கள் மீதான வரி கண்டிப்பாக செலுத்த வேண்டும். நீங்கள் வரி விகிதம் 10%-க்குள் வந்து விட்டால் சுமார் 2.47% வரி பணத்தை திரும்ப பெறும் வசதி, 30% முதலீடினை செய்தால் 1.9% வரி பணத்தை நீங்கள் பெற முடியும். நீங்கள் தங்கத்தை 36 மாதங்களுக்கு பிறகு நீங்கள் பெற விரும்பினால் 10-20% வரி கண்டிப்பாக வரி செலுத்த வேண்டும்

நீங்கள் தங்கப்பத்திரங்களை எட்டு ஆண்டுகள் கண்டிப்பாக வைப்பாக வைத்திருக்க வேண்டும். ஆனால் 5 ஆண்டுகளுக்குள் இதனை திரும்ப பெற்றால் வட்டி விகிதம் மிக குறைவு. நீங்கள் முன்னதாகவே தங்கபத்திரங்களை விற்க விரும்பினால் அப்போதைய தங்க விலையின் படியே  உங்களுக்கு சேமிப்பு தொகை கிடைக்கும்.

தங்க பத்திரங்கள் மீதான கடன்:

தங்க பத்திரங்கள் மீதான கடன் பெறும் வசதியினை தபால்நிலையம் மூலம் பெற்றுக்கொள்ளாம். தங்க பத்திரம் மீதான கடன் ரிசர்வ் வங்கியின் வழிமுறைகளை பின்பற்றி கொடுக்கப்படும்.

தங்க பத்திரம் முதிர்வு காலத்திற்கு முன் பணம் தேவை எனில், பெறும் வசதி, அதுமட்டுமல்லாது சேமிப்பாளர்கள் தங்க பத்திரத்தை NSE Registered தரகர்கள் மூலம் விற்றுக்கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

https://in.finance.yahoo.com/news/gold-schemes-invest-ignore-064547435.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *