BREAKING NEWS:-
Search

புகைபிடிப்பதால் தான் சீனாவில் மூன்றில் ஒரு ஆண் இறக்கிறார்

சீனாவில் உள்ள ஆண்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆண்கள் 20 வயதிற்கு முன்னரே புகை பிடிக்க ஆரம்பித்து விடுகின்றனர் என்று ஆராய்ச்சியாளர்கள் லான்சட் மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளனர்.

இந்த பழக்கத்தினால் பாதி பேர் இறந்து போகின்றனர். ஆராய்ச்சியாளர்கள் நாடுதழுவிய இரண்டு ஆய்வுகளை 15 வருடங்களாக நடத்தினர். நூற்றாயிரக்கணக்கான மக்கள் அதில் பங்கு பெற்றனர்.

2 (1)

சீனாவில் இந்த நிலை தொடர்ந்தால், புகையிலையினால் பெரும்பாலும் ஆண்களின் இறப்பு எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டிற்குள் இரண்டு மில்லியனை அடையும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள், சீன மருத்துவ அறிவியல் அகாடமி, சீன நோய் கட்டுப்பாட்டு மையம் இணைந்து இந்த ஆய்வை நடத்தினார்கள்.

ஆனால் இணை ஆசிரியர் ரிச்சர்ட் பீடோ மக்களை இதிலிருந்து மீட்க முடியும் என்று நம்பிக்கையுடன் கூறினார். இளைஞர்கள் இந்த பழக்கத்தை கைவிட வேண்டும் என்று கூறினார்.

வளர்ந்த நாடுகளில் புகைப் பிடிக்கும் விகிதங்கள் வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்காவில் குறைவான அளவில் தான் அதாவது ஐந்து பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் தான் புகை பிடிக்கின்றனர்.

3 (1)

பெய்ஜிங்கில் புகை பிடித்தலுக்கு தடை செய்துள்ளனர். உலகளவில் புகையிலை பயன்படுத்துபவர்களில் பாதி பேர் இறந்து விடுகின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *