BREAKING NEWS:-
Search

பிரிட்டனை சேர்ந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு..!

வேதியியல் விஞ்ஞானியான ஆஃல்பிரட் நோபல் என்பவரால் உலகின் தலை சிறந்த அறிஞர்களுக்கு ஆறு துறைகளின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு, ஸ்வீடன் தலைநகரான ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும்.

இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு பெறுபவர்களின் விபரங்கள் கடந்த திங்கள் முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவதற்கான நோபல் பரிசுக்காக ஜப்பானைச் சேர்ந்த பேராசிரியர் ”யோஷினேரி ஓஷிமி” தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து நேற்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதன்படி அமெரிக்காவைச் சேர்ந்த இயற்பியல் பேராசிரியர்களான டேவிட் தவுலெஸ், டன்கன் ஹல்டேல் மற்றும் மைக்கேல் கோஸ்டர்லிட்ஸ் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூவருமே பிரிட்டனை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.

பருப்பொருட்களில் இதுவரை அறியப்படாத மூலக்கூறுகளை கண்டறிந்ததற்காக இவர்கள் மூவரும் நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். புதிதாக அறியப்பட்டுள்ள இந்த மூலக்கூறுகளால் செய்யப்படும் மூலப்பொருட்களைக் கொண்டு அடுத்த தலைமுறை மிண்ணனுத்துறை மற்றும் மின் கடத்தி ஆகியவற்றில் மிகப்பெரிய மாறுதல்களை கொண்டு வர முடியும் என கூறப்படுகிறது.

மருத்துவம் மற்றும் இயற்பியல் துறைகளை தொடர்ந்து, இன்று வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது.

நன்றி:http://edition.cnn.com/2016/10/04/world/2016-nobel-prize-physics/

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *