BREAKING NEWS:-
Search

பன்றி மூக்கு எலியா!

இந்தோனேஷியாவில் உள்ள அறிவியல் அறிஞர்கள் புதிய வகை பன்றி மூக்கு எலியை கண்டுபிடித்துள்ளனர். இந்த எலி மற்ற எலிகளிலிருந்து வேறுபட்டு காணப்படுகிறது. இந்த எலிக்கு Hyorhinomys stuempkei என்று பெயரிட்டுள்ளனர்.

முதன்முதலாக இந்த வகை எலிகள் ஐந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எலிகள் சுலவேசி ஜலெண்டில் 2015 ஜனவரி மாதம் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, அமெரிக்கா ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

9 (1)

தற்போது இந்த வகையான எலியினை பற்றி ஆஸ்திரேலிய மற்றும் ஆசிய மலைகளில் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருவதாக ரோவே என்ற ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.

இந்த வகை எலிகள் காடுகளில் எந்த பகுதிகளில் பரவி காணப்படுகிறது என்பது இன்னும் தெரியவில்லை. இந்த வகை எலிகள் பற்றிய ஆராய்ச்சிக்காக இந்தோனேசியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு ஆறு வாரங்களாக காடுகளில் தங்கி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த வகை பன்றி மூக்கு எலி மற்ற எலிகளை காட்டிலும் அதிக ஆற்றல் கொண்டதாகவும் 250 கிராம் எடை கொண்டதாகவும் இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

10 (1)

இதே போன்று கடந்த வருடம் பல் இல்லாத எலியினை கிரீன்லாந்தில் உள்ள அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர். தற்போது கண்டறியப்பட்ட பன்றி மூக்கு எலி இந்தோனேசியா அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

http://www.bbc.co.uk/news/world-asia-34451265

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *