BREAKING NEWS:-
Search

பதற்றமில்லா உலகை உருவாக்கும் முயற்சியே யோகா தினம்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

புதுடெல்லி: சர்வதேச யோகா தினம் இன்று (ஞாயிறு) கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுடெல்லி ராஜ்பத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பிரமதர் மோடி தலைமையில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகா செய்தனர். நிகழ்ச்சியை துவக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “இது மக்களை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் வலிமைப்படுத்தவே ஆரம்பிக்கப்பட்டது. உலகத்தை பதற்றமில்லாத இடமாக மாற்றவும், நல்லிணக்கம் ஏற்படவும் யோகா உதவி செய்யும்.

யோகா வெறும் உடல் வலிமைக்காக மட்டுமல்ல. அப்படி எண்ணுவது பெரிய தவறு. அவ்வாறாக இருப்பின் சர்க்கஸில் வேலை செய்யும் அனைவரும் யோகிகள் என அழைக்கப்படுவார்கள். உடலை இலகுவாக ஆக்குவது மட்டும் யோகாவின் வேலையல்ல.

இப்போது நாம் இந்த நிகழ்ச்சியை கொண்டாடுவதோடு மனிதனின் மனதை பயிற்றுவிக்கிறோம். அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் புதிய சகாப்தத்தை தொடங்குகிறோம். இது தொடர்ந்து நடக்கும். இது மனித குலத்துக்கான நிகழ்ச்சி. நல்லிணக்கத்தை பரப்ப, பதற்றம் இல்லாத உலகை உருவாக்கும் முயற்சி,” என்றார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *