BREAKING NEWS:-
Search

பசிபிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த எல்நினோ மற்றும் லாநினோ

NOAA  ஆராய்ச்சியாளர்கள் நடத்திய காலநிலைப் பற்றி ஆய்வில் கண்டறிந்த தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் தற்போது பசிபிக் பெருங்கடலில் உள்ள  நிலநடுக்கப்பகுதியில் சக்தி வாய்ந்த El Niño பாதிப்பு ஏற்படும் என்பதேயாகும். இந்த பாதிப்பால் 2016-ம் ஆண்டு முழுவதும் பல்வேறு இயற்கை சீர்கேடுகள் கண்டிப்பாக நிகழ வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த மாற்றம் பெரும்பாலும் பசிபிக் பெருங்கடலில் உள்ள குளிர் பகுதியில்தான் நிகழும் என்று கூறப்படுகிறது. தற்போது விஞ்ஞானிகள் இந்த பாதிப்பு பற்றிய படக் காட்சியினை வெளியிட்டுள்ளனர். அதன்படி பசிபிக்பெருங்கடலில் 1000 அடி ஆழத்தில் வசந்த காலத்தில் குளிர்ந்த நீராக உள்ள பகுதியில் அதிக வெப்பம் காணப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த வெப்ப பாதிப்பால் கடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த மாற்றத்தால் El Niño and La Niña பாதிப்பு பசிபிக் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் நிகழக்ககூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

http://www.popsci.com/does-this-blob-cold-water-mean-la-nina-is-on-its-way

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *