BREAKING NEWS:-
Search

நோட் 7 திறன்பேசிக்கு பிறகு கேலக்சி ஜே5 திறன்பேசியும் தீப்பிடிப்பதாக குற்றச்சாட்டு..!

சாம்சங் நிறுவனத்தின் நோட் 7 திறன்பேசி தீப்பிடித்த சர்ச்சையினால், விற்பனை செய்யப்பட்ட 2.3 மில்லியன் நோட் 7 திறன்பேசிகளை அந்நிறுவனம் திரும்பப் பெற்றது. இந்த தீப்பிடிக்கும் சர்ச்சையினால் சாம்சங் நிறுவனத்தின் வர்த்தகம் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாது, வாடிக்கையாளர்களிடம் நம்பிக்கையையும் சாமசங் நிறுவனம் இழந்தது. இந்நிலையில் சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய கேலக்சி ஜே5 திறன்பேசி தீப்பிடித்ததாக பிரான்ஸ் நாட்டில் புகார் ஒன்று வந்துள்ளது.

பிரான்சைச் சேர்ந்த லாம்யா என்ற பெண்மணி, தன்னுடைய குடும்ப விழா ஒன்றில் கலந்து கொண்டிருந்தபோது, தனது ஜே5 திறன்பேசி திடீரென சூடாகி, அதிலிருந்து புகை வருவதை கண்டதாகவும், இதனால் பயந்து போய் திறன்பேசியை தூக்கி எரிந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

“திறன்பேசியிலிருந்து புகை வந்ததும் நான் பயந்துவிட்டேன். என்ன செய்வதென்று தெரியாமல், உடனே அதனை தூக்கி எரிந்துவிட்டேன்.” என லாம்யா கூறியுள்ளார். தான் தூக்கி எரிந்த பிறகு, அந்த திறன்பேசி தீப்பற்றி எரிந்ததாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

லாம்யா இந்த திறன்பேசியை கடந்த ஜூலை மாதம்தான் இணையதளம் வாயிலாக வாங்கியுள்ளார். ”ஜே5 திறன்பேசி விற்பனைக்கு வந்து பல மாதங்களுக்கு பிறகு தற்போதுதான் முதன்முறையாக இது போன்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏதாவது ஒரு ஜே5 திறன்பேசியில் ஏற்பட்டுள்ள சிறிய குறைபாட்டினால் கூட இந்த நிகழ்வு நடந்திருக்கலாம். அதற்காக எல்லா ஜே5 திறன்பேசிகளும் குறைபாடுகளுடன் இருப்பதாக உறுதியாக கூற முடியாது.” என திறன்பேசி தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

“தீப்பிடித்ததாக புகார் எழுந்துள்ள ஜே5 திறன்பேசியை இன்னும் நாங்கள் முழுமையாக சோதனை செய்யவில்லை. சோதனை செய்யாமல் அது குறித்து கருத்து தெரிவிக்க இயலாது. எங்களுக்கு வாடிக்கையாளர்களின் பாதுகாப்பே முக்கியம். எங்கள் தயாரிப்பில் தவறுகள் இருந்தால், கண்டிப்பாக அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்போம்.” என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நன்றி:http://tech.firstpost.com/news-analysis/after-note-7-there-are-now-reports-of-a-samsung-galaxy-j5-catching-fire-in-france-345984.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *