BREAKING NEWS:-
Search

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் மசாலா பொருட்கள்..!

உலகின் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் நீரிழிவு நோய் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. உணவுப் பழக்கவழக்கம், வயது, உடல் எடை, உடலுறவு போன்ற பல்வேறு காரணங்கள் நீரிழிவு நோய்க்கு காரணமாக அறியப்படுகிறது.

மருந்துகள் மற்றும் உணவுக் கட்டுப்பாடு ஆகியவை நீரிழிவு நோய்க்கு தற்போதைய மருத்துவ முறையாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. நீரிழிவுக்கு மருந்துகள் அளிப்பதை விட, உணவுக்கட்டுப்பாடு மூலம் நீரிழிவு நோயின் தாக்கத்தை குறைப்பதற்கு கடந்த சில ஆண்டுகளாக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

சமையல் பொருட்களாக பயன்படும் மூலிகைகள், மசாலா போன்றவை கூட நீரிழிவு நோய்க்கான உணவு மருத்துவத்தில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. ஆண்டி ஆக்சிண்டண்ட், அழற்சி எதிர்ப்பு மற்றும் நீரிழிவு எதிர்ப்பு போன்ற தன்மைகள் ஆகியவற்றால் இயற்கை மருத்துவ முறைகளில் மசாலாவுக்கு பல ஆண்டுகளாக முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவில் மசாலாவில் பயன்படுத்தப்படும் இலவங்கப்பட்டை, இஞ்சி, மஞ்சள், சீரகம் ஆகியவற்றில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த உணவுப் பொருட்கள் நீரிழிவு நோய் மேலும் தீவிரமடையாமலும் கட்டுப்படுத்துகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி:

https://www.ncbi.nlm.nih.gov/pubmed/27664636




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *