BREAKING NEWS:-
Search

நிதி அமைச்சகத்தின் புதிய அறிவிப்புகள்..!

கடந்த நவம்பர் 8-ஆம் தேதி இரவு அன்று கருப்புபண ஒழிப்பு நடவடிக்கைகளை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியாகி நேற்றோடு ஒரு மாதம் நிறைவடைகின்றது. எனவே இதனை முன்னிட்டு நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நேற்று பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவை என்ன என்பதை கீழே தரப்பட்டுள்ளன.

கடன் மற்றும் வரவு அட்டை மூலம் 2000 ரூபாய் வரை பணப்பரிவத்தனை செய்பவர்களுக்கு சேவை வரி கிடையாது.

கடன் மற்றும் வரவு அட்டை மூலம் பெட்ரோல், டீசல் நிரப்பினால் 0.5 சதவீத கட்டணம் திரும்ப அளிக்கப்படும்

கடன் மற்றும் வரவு அட்டை மூலம் உணவகங்களில் பணம் செலுத்தினால், 0.5 சதவீத கட்டணம் திரும்ப அளிக்கப்படும்.

ரயில் பயணச்சீட்டை மின்னணு முறையில் பெற்றால் 10 லட்சம் வரை காப்பீடு.

கிசான் பற்று அட்டை வைத்திருப்பர்களுக்கு நபார்டு வங்கிகள் மூலம் ரூபே கார்டுகள் வழங்கப்படும்.

சுங்கச் சாவடிகளில் மின்னணு பணப்பரிவர்த்தனை மூலம் கட்டணம் செலுத்தினால் 10 சதவீதம் தள்ளுபடி

ரயில்வே நிலையங்களில் ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனை செய்தால் கட்டணத்திலிருந்து 5 சதவீதம் தள்ளுபடி

பத்தாயிரத்திற்கு அதிகமான மக்கள் தொகை கொண்டுள்ள கிராமங்களுக்கு இரண்டு அட்டை தேய்க்கும் இயந்திரங்கள் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் கிராமங்கள் நாடு முழுக்க தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.

ரயில் நிலையங்களில் மின்னணு முறையில் பருவப் பயணச்சீட்டு வாங்கினால் 0.5 சதவீதம் தள்ளுபடி

ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களுக்கு மின்னணு முறையில் தவணைத் தொகை செலுத்தினால் 8 சதவீதம் தள்ளுபடி

ரயில்களில் உணவுகள் வாங்க மின்னணு முறையில் கட்டணம் செலுத்தினால் ஐந்து சதவீதம் தள்ளுபடி

இந்த திட்டங்களுக்காக தள்ளுபடிகள் அனைத்தும் வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அளிக்கப்படும்..

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *