BREAKING NEWS:-
Search

நடமாடும் இயந்திரம் மூலம் வீடியோ கண்ணாடி விற்கும் ஸ்னாப் சாட்..!

பிரபல சமூக வலைத்தளமான ஸ்னாப் சாட் நிறுவனம், சமீபத்தில் ”ஸ்பெக்டாக்கில்ஸ்” என்ற புதிய வீடியோ கண்ணாடியை அறிமுகப்படுத்தியது. இந்த கண்ணாடியை நாம் அணிந்து கொண்டு, நாம் பார்க்கும் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்ய முடியும். மேலும் பதிவு செய்த காட்சிகளை, அந்த கண்ணாடி மூலமாகவே ஸ்னாப் சாட் சமூக வலைத்தளத்தில் பகிர முடியும். இந்த புதிய தொழில்நுட்பத்திற்கு வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதனை தொடர்ந்து இந்த கண்ணாடியை, நடமாடும் இயந்திரம் மூலம் விற்பனை செய்ய ஸ்னாப் சாட் முடிவெடுத்துள்ளது. இதன் முதல் கட்டமாக கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வெனிஸ் கடற்கரையில் ’ஸ்னாப் பாட்’ என்ற ஸ்பெக்டாக்கில்ஸ் விற்கும் நடமாடும் இயந்திரத்தை நிறுத்தி வைத்தது.

130 அமெரிக்க டாலர்களை செலுத்தினால் இந்த இயந்திரம் ஒரு ஸ்பெக்டாக்கில்ஸ் கண்ணாடியை அளிக்கும். இந்த இயந்திரத்தை கண்டதும், நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று ஸ்பெக்டாக்கில்ஸ் கண்ணாடியை வாங்கிச் சென்றார்களாம்.

சிறிது நேரத்திலேயே அந்த இயந்திரத்தில் இருந்த அனைத்து கண்ணாடிகளும் விற்றுத் தீர்ந்துள்ளன. ஏனெனில் இந்த கண்ணாடி இணையதளத்தில் 1000 டாலர்களுக்கு விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்களிடம் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இந்த விற்பனை இயந்திரத்தை பல்வேறு பகுதிகள் நிறுத்த ஸ்னாப் சாட் முடிவெடுத்துள்ளது. மேலும் இந்த வாகனம் நிறுத்தி வைக்கப்படும் இடம், 24 மணி நேரத்திற்கு முன்னர் ஸ்னாப் சாட்டின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நன்றி:http://tech.firstpost.com/news-analysis/snapchat-starts-selling-spectacles-from-vending-machines-called-snapbots-346630.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *