BREAKING NEWS:-
Search

தெற்காசிய நாடுகளுக்கான செயற்கைகோளை ஏவ உள்ள இஸ்ரோ..!

பாகிஸ்தானை தவிர அனைத்து தெற்காசிய நாடுகளும் பலன் பெறும் வகையில், புதிய செயற்கை கோளை வரும் மே 5-ஆம் தேதி ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இந்த செயற்கை கோளானது, தகவல் தொலை தொடர்புக்கு உதவி புரியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதள மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ள இந்த செயற்கைக்கோள், 2,195 கி.கி எடை கொண்டது.

மேலும் 12 கே.யு-பேண்ட் டிரான்ஸ்பாண்டர்கள் இந்த செயற்கோளில் இடம்பெற்றிருக்கும். இந்த ராக்கெட்டை தயாரிக்க  12 ஆண்டுகள் செலவிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த  2014-ஆம் ஆண்டு நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ”அண்டை வீட்டார்களுக்கு எங்களுடைய பரிசு” எனக் கூறி, இந்த செயற்கைகோள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த செயற்கை கோள் திட்டத்தில் பாகிஸ்தான் சேரவில்லை. எனவே இந்த செயற்கை கோள் மூலம் பாகிஸ்தான் மட்டும் பயன் பெற முடியாது. ”இயற்கை பேரிடர்களின் போது மற்ற நாடுகளிடையே தகவல்களை பரிமாரிக் கொள்ள  உதவுவதே, இந்த செயற்கை கோளின் முக்கிய நோக்கமாகும்.” என இஸ்ரோ தலைவர் கிரண் குமார் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு நாடும் தங்களுடைய பணிகளுக்காக 36 முதல் 54 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசை கொண்ட, தனிப்பட்ட டிரான்ஸ்பாண்டர்களை பயன்படுத்திக் கொள்ளும் திறன் இந்த செயற்கைகோளுக்கு உண்டு எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நன்றி:www.isro.gov.in




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *