BREAKING NEWS:-
Search

தீபாவளிக்கு சலுகைகளை அள்ளித் தரும் சியோமி நிறுவனம்..!

சமீபகாலமாக இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுவரும் சியோமி நிறுவனம், தீபாவளி பண்டிகைக்காக பல சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகையானது வரும் அக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய இரு நாட்களுக்கு அளிக்கப்பட உள்ளது.

இந்த சலுகையின் படி 5 ஆயிரம் ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை சியோமி நிறுவன பொருட்களை வாங்குபவர்களுக்கு இலவச மடிக்கணினி ஸ்டிக்கர்களும், எம்.ஐ சாவிச் சங்கிலியும் இலவசமாக அளிக்கப்படும்.15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு எம்.ஐ மின்விசிறி இலவசமாக வழங்கப்படும். மேலும் எம்.ஐ பொருட்களுக்கு 30 சதவீதம் வரை தள்ளுபடியும், வட்டி ஏதும் இல்லாமல் தவணை முறையில் பணம் செலுத்தும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இதையெல்லாம் விட ஒரு ரூபாய் சலுகை என்ற ஆச்சரியத்தக்க சலுகையையும் அந்த நிறுவனம் அளித்துள்ளது. அதன்படி சலுகை நாளான அக்டோபர் 17-ஆம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு ரெட்மி 3 எஸ் பிரைம் மற்றும் எம்.ஐ ப்ளூடூத் ஆகியவற்றை ஆர்டர் செய்யும் முதல் 30 நபர்களுக்கு ஒரு ரூபாய் விலையில் அந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. அக்டோபர் 18-ஆம் தேதி 16 ஜிபி ரெட்மி நோட் 3-யை வாங்கும் 30 நபர்களுக்கு 1 ரூபாய்க்கு அந்த பொருள் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

இதுமட்டுமல்லாமல் 100 எண்ணிக்கையில் எம்.ஐ ஒளிபெருக்கிகள், பவர்பேங்க் மற்றும் பேண்ட் 2 ஆகியவற்றையும் ஒரு ரூபாய்க்கு அளிக்க உள்ளது. இது மட்டுமல்லாமல் இந்த நாட்களில் பொருட்கள் வாங்கும் ஒவ்வொரு நபர்களுக்கும் 100, 200 மற்றும் 500 ரூபாய்களுக்கு சலுகையும் அளிக்க உள்ளது.

நன்றி:http://tech.firstpost.com/news-analysis/xiaomi-diwali-deals-redmi-note-3-mi-band-2-and-more-for-re-1-340786.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *