BREAKING NEWS:-
Search

தானியங்கி கார் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவுள்ள  பைடு நிறுவனம்..!

சீனாவில் கூகுள், மோசில்லா போன்ற இணைய தேடு பொறிகள் அந்நாட்டு அரசால் தடை செய்யப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக உள்ளூர் தேடு பொறிகள் மட்டுமே அந்நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் முன்ணனியில் இருப்பது பைடு என்ற தேடுபொறி நிறுவனம். கிட்டத்தட்ட கூகுள் போல உள்ளூரில் செயல்படும் பைடு நிறுவனம், தானியங்கி கார் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் குறிப்பிட்ட பாதுகாக்கப்பட்ட  இடங்களில்  மட்டும் தனது தானியங்கி கார் சேவையை வரும் ஜூலை மாதம் அறிமுகப்படுத்த உள்ளதாக பைடு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து  படிப்படியாக, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர சாலைகளில்  தங்கள்  நிறுவனத்தின் தானியங்கி கார்கள் வரும்  2020-ஆம் ஆண்டு செயல்படத் துவங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்திற்கு ’அப்போலோ’  என பைடு பெயரிட்டுள்ளது. மேலும் தன்னுடைய நிறுவன தானியங்கி கார்களில், செயற்கை அறிவு தொழில்நுட்பத்தை புகுத்தவும் அந்நிறுவனம் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது. செயற்கை அறிவு தொழில்நுட்ப ஆராய்ச்சிக்காக மட்டும், அந்நிறுவனம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம்  3 பில்லியன் அமெரிக்க டாலர்களும், அக்டோபர் மாதம் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களும் முதலீடு செய்திருந்தது. எதிர்காலத்தில் தானியங்கி கார்களில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகப்பெரிய பங்கு வகிக்கும் என பைடு நிறுவனம் நம்புகிறது.

இதற்கு முன்னர் தானியங்கி கார் ஆராய்ச்சியில் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபிள்யூவுடன் இணைந்து பைடு செயல்பட்டு வந்தது. ஆனால் கடந்தாண்டு நவம்பர் மாதம், கருத்து வேறுபாடு காரணமாக இரு நிறுவங்களும் தங்கள் உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்தன. பைடு மட்டுமல்லாமல் உலகின் பல முண்ணனி நிறுவங்களும் தானியங்கி கார் ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக கூகுள் மற்றும் டெல்பி ஆகிய நிறுவனங்கள் பெருமளவில், தானியங்கி கார் ஆராய்ச்சியில் முதலீடு செய்துள்ளன.

நன்றி:

http://tech.firstpost.com/news-analysis/baidu-will-launch-its-self-driving-car-technology-in-restricted-environments-in-july-372558.html




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *