BREAKING NEWS:-
Search

தாஜ்மஹாலை சுத்தம் செய்ய மண் சிகிச்சை!

ஆக்ரா: பொலிவிழந்து வரும் தாஜ்மஹாலை பாதுகாப்பது குறித்த டைம்ஸ் ஆப் இந்தியா  தகவல் அறியும் உண்மை சட்டத்தில் விபரம் கேட்டிருந்தது. தற்போது மாசுபாடு காரணமாக தாஜ்மஹால் மஞ்சள் கலந்த  பழுப்பு நிறத்தில் பொலிவிழந்து காணப்படுகிறது. இந்திய தொல்பொருள்  ஆராய்ச்சி நிறுவனத்தினர் அதை மண் சிகிச்சை செய்து சரிசெய்யலாம்  என்று பதில் அனுப்பியுள்ளனர் , வெளிப்புறத்தில் உள்ள மஞ்சள்கலந்த பழுப்பு நிறத்தை  மண் சிகிச்சையின் மூலம் நீக்கி பொலிவுபடுத்த 9 ஆண்டுகள் ஆகும் என்று  கூறியுள்ளனர்.

ஏப்ரல் மாதம் சுற்று சூழலுக்காக நடைபெற்ற பாராளுமன்ற நிலைக்குழு வில் (PSC) தாஜ்மஹால் மறுசீரமைப்பு பற்றிய ஒரு இடைக்கால செயல் திட்டத்தை சமர்ப்பிக்குமாறு தொல்லியல் துறையினர் கூறினர். தாஜ்மஹாலின் இரசாயனத்தை சுத்தம் செய்ய 6-7 ஆண்டுகளுக்கு ஒருமுறை மண் சிகிச்சை செய்ய வேண்டும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் கூறியது.

2 (1)

மூத்த தொல்லியல் துறை அதிகாரிகள் (PSC)  கூட்டத்தில் காற்று மாசுப்படுத்திகளினால் தான் தாஜ்மஹால் பொழிவிழந்து காணப்படுகிறது என்று கூறினார்கள். பளிங்கு கற்களின் எதிர்வினைக்குப் பின்னர் நினைவுச்சின்னமான தாஜ்மஹாலின் உண்மையான நிறம் மற்றும் பிரகாசம் மறைந்துவிட்டது என்று இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறையினர் தெரிவித்தனர்.

பளிங்கு கற்களுக்கு மேற்பகுதியில் களிமண் சிகிச்சை செய்யப்படும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் தெரிவித்துள்ளது. இந்த சிகிச்சையினால் இரசாயன பொருட்கள் குறைவாக பயன்படுத்தப்படுவதால் இது ஒரு பாதுகாப்பான முறை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் கூறுகிறது.

3 (1)

தாஜ்மஹாலின் நான்கு வாயில்கள் மற்றும் கோபுரங்களை மண் சிகிச்சை செய்வது இதுவே முதல் முறை என்று இந்திய தொல்லியல் துறையின் மூத்த  அதிகாரி  கூறியுள்ளார். ஒவ்வொரு நான்கு கோபுரங்களையும் மண் சிகிச்சை மூலம் சுத்தம் செய்ய 10 மாதங்கள் ஆகும் என்று கூறியுள்ளார். மேலும் தாஜ்மஹாலின் மேற்புறத்தை முழுமையாக மண்சிகிச்சை செய்து பழைய பொலிவுக்கு கொண்டுவர 9 ஆண்டுகள் ஆகும் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *