BREAKING NEWS:-
Search

தனது முதல் சரக்கு விண்கலத்தை ஏவியுள்ள சீனா..!

விண்வெளி ஆராய்ச்சியில் தொடர்ந்து அமெரிக்காவுக்கு போட்டியாக விளங்கி வரும் சீனா, இன்று தனது முதல் சரக்கு விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. இந்த சரக்கு விண்கலமானது, புவி சுற்றுப்பாதையில் அமைக்கப்பட்டு வரும் சீனாவின் சர்வதேச விண்வெளி மையத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல உள்ளது.

டியான்சோ-1 என பெயரிடப்பட்டுள்ள சீனாவின் இந்த முதல் சரக்கு விண்கலம், தென் சீனாவில் ஹைனான் மாகாணத்தில் உள்ள விண்கல ஏவுதளத்திலிருந்து ஏவப்பட இருக்கிறது. தற்போது 2022-ஆம் ஆண்டிற்குள் சர்வதேச விண்வெளி மையத்தை அமைக்கும் பணியில் சீனா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த விண்வெளி மையமானது, ரஷ்யாவின் விண்வெளி மையத்திற்கு போட்டியாக சீனா உருவாக்கி வருகிறது. இந்த விண்வெளி மையத்தின் கட்டுமானம் நிறைவடையும் போது, உலகில் சொந்தமாக விண்வெளி ஆராய்ச்சி மையம் கொண்டுள்ள ஒரே நாடு என்ற பெருமையை சீனா பெறும்.

இந்த சரக்கு விண்கலமானது, டியாகாங்-2 என்ற சீனாவின் சர்வதேச விண்வெளி மையத்தில் தரையிறங்கி, அந்த மையத்திற்கு தேவையான எரிபொருட்களை அளிக்க உள்ளது. இந்த விண்கலம் புவிக்கு திரும்பும் முன்னர், புவியீர்ப்பு விசை உட்பட பல்வேறு ஆராய்ச்சிகளிலும் ஈடுபட உள்ளது.

நன்றி:

China to launch first cargo spacecraft tomorrow




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *