BREAKING NEWS:-
Search

தனது இறுதிப் பயணத்தை டைட்டன் துணைக்கோளில் முடிக்க உள்ள காசினி விண்கலம்..!

நாசாவின் காசினி விண்கலம், தனது இறுதிப்பயணத்தை சனி கோளின் மிகப்பெரிய துணைக்கோளான டைட்டனுக்கு இன்று மேற்கொள்ள இருக்கிறது. இதன்படி இன்று டைட்டன் துணைக்கோளின் மேற்பரப்பில் இருந்து சுமார் 979 கிலோ மீட்டர் தொலைவில், மணிக்கு 21,000 கி.மீட்டர் வேகத்தில் கெசினி கடந்து செல்லும். இந்த பயணத்தின் போது, சனிக்கோளின் வட துருவப் பகுதியில் ஹைட்ரோ கார்பன் ஏரிகள் மற்றும் கடல்கள் இருக்கின்றனவா? என்ற ஆராய்ச்சியை காசினி விண்கலம் மேற்கொள்ள உள்ளது. இந்த ஆராய்ச்சியின் போது சனிக்கோளின் மேற்பரப்பை, தனது சக்தி வாய்ந்த ராடார் கருவி மூலம், தெளிவான புகைப்படங்களாக எடுக்க உள்ளது.

நாசாவின் காசினி விண்கலம் கடந்த 13 ஆண்டுகளாக சனிக்கோளின் சுற்றுப்பாதையில் சுற்றி வருகிறது. இந்த காலத்தில் சனிக்கோளின் வளையங்கள் குறித்தும் அந்த வளையங்களுக்கு அருகில் அமைந்துள்ள துணைக் கோள்கள் பற்றியும் காசினி தொடர்ந்து ஆராய்ந்து வந்தது. இந்த துணைக் கோள்களில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா? என்பது குறித்தும் காசினி நாசாவுக்கு தகவல்களை அனுப்பி வந்தது.

காசினி விண்ணில் ஏவப்படும் வரை சனிக்கோளின் துணைக் கோள்களில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விஞ்ஞானிகள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தன்னுடைய திறமையான செயல்பாட்டின் மூலம், மிகத் தெளிவான ஆய்வு முடிவுகளை அளித்து விஞ்ஞானிகளை காசினி ஆச்சரியப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

நன்றி:

http://tech.firstpost.com/news-analysis/nasas-cassini-spacecraft-to-make-one-final-visit-to-titan-before-crashing-into-saturn-372608.html/




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *