BREAKING NEWS:-
Search

தண்ணீரின் வயது!

நாம் தினமும் குடிக்கும் தண்ணீர்  இன்றோ, நேற்றோ உருவானது என்று நாம்  நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால், பூமியில் உள்ள தண்ணீர் சூரியனை விட தண்ணீர் மிகவும் பழமையானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.  தண்ணீர் ,   சூரிய குடும்பத்திற்கு வெளியேயுள்ள கோள்களிலும், நட்சத்திரங்களிலும்  வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றும்  ஆராய்ச்சியாளர்கள்  கூறுகின்றனர்.

நம்முடைய வாழ்க்கை மற்ற கிரகங்களை சார்ந்து இருக்கிறதா ?என்று கண்டுபிடிக்க இது ஒரு முக்கியமாக படி நிலையாக இருக்கிறது என்று எக்சிடர் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி குழு உறுப்பினர்  பேராசிரியர் டிம் ஹாரிஷ் தெரிவித்துள்ளார்.

பூமியில் உள்ள உயிர்களுக்கு நீர் தான் முக்கிய பரிணாம வளர்ச்சியாக இருக்கிறது என்று நமக்கு தெரியும். பூமியில் உள்ள  தண்ணீர் ஆரம்பத்தில்  சூரிய மண்டலத்தின் குறிப்பிட்ட இடத்தில்  தோன்றி இருப்பதற்கு  சாத்தியம் இருக்கிறது. மேலும் அந்த சூரிய மண்டலத்தில்  எங்கு வேணுமானாலும் தோன்றியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

சூரிய குடும்பத்திற்கு வெளியே தோராயமாக 2,000  கோள்கள் தற்போது வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  ஆனால், இன்னும் எத்தனை கண்டுபிடிப்பதற்காக காத்திருக்கின்றன என்று யாருக்கும் தெரியாது. மதிப்பீட்டின் படி, பால்வெளி அண்டத்தில் உள்ள ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு கிரகமாகவே இருப்பதற்கு சாத்தியம் இருக்கிறது என்று கண்டறியப்பட்டது.

9 (1)

தண்ணீர் சூரிய குடும்பம் முழுவதும் இருப்பதற்கான அனைத்து ஆதாரங்களும் இருக்கின்றன. வால் நட்சத்திரம் மற்றும் எரி நட்சத்திரங்களிலும் தண்ணீர் காணப்படுகிறது.  மேலும் சூரிய மண்டலத்தில் உள்ள துணை கிரகங்கள் , சந்திரன் , வியாழன் யூரோபா அல்லது சனியின் இன்செலடஸில் என்பனவாகும்.

தண்ணீர் சூரிய நெபுலாவில்  இருந்து வந்தது என்பது நவீன அண்டவியலில் நிலவும்  கோட்பாட்டில் கருதுகிறார்கள் . அதனை   புரோடோபிளானடரி வட்டுகளில் என்றும்  அழைக்கிறார்கள்.

10

11

தண்ணீர் ஏற்கனவே சூரிய புரோடோபிளானடரி வட்டுகளில் இருக்கிறதா, அல்லது சூரிய குடும்பத்தில் இருந்து உருவாக்கப்பட்டாதா என்று  மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வானியல் ஆய்வுப்படிப்பு மாணவர் Ilse Cleeves தலைமையில் ஆய்வு செய்ய  முடிவுசெய்துள்ளனர்.

  நீர் எப்படி உருவானது என்று கண்டுபிடிக்கின்றனர்:

  • ஆராய்ச்சியாளர்கள் இரண்டு வகையுள்ள உறைந்த தண்ணீரை எடுத்து கொள்கின்றனர். வழக்கமான ஹைட்ரஜன் சார்ந்த நீரை “கன நீர்” என்று அழைக்கப்படும் . அந்த கன நீரில் ஹைட்ரஜன் ஐசோடோப்பு தூத்தேரியம் அடங்கியுள்ளது. இந்த தண்ணீர் பொதுவாக வால்மீன்கள், விண்கற்கள் மற்றும் புவியின் பெருங்கடல்களில் காணப்படுகிறது.
  • விஞ்ஞானிகள்,சூரிய நெபுலாவை உறைந்த கன நீர் இல்லாமல் உருவகப்படுத்தப்பட்டு, சூரிய நெபுலா இரசாயன மாற்றங்களின் இருந்து தூத்தேரியத்தை உருவாக்கம் செய்ய முடிகிறதா என்பதை கண்டுபிடிக்கிறார்கள். இதன் விளைவாக  கன நீர் இதனை உற்பத்தி செய்வதில்லை என்று கண்டறிந்துள்ளனர் .

          30  முதல் 50 சதவீதம் தண்ணீர் சூரிய நெபுலாவில் தோன்றியுள்ளது. அப்படியென்றால்,  சூரிய குடும்பத்தை விட பல மில்லியன் ஆண்டுகள்  தண்ணீர் பழைமையானது . அதனால் பூமியில் உள்ள தண்ணீர் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது என்று கண்டறிந்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil




One thought on “தண்ணீரின் வயது!

  1. govindasamy kalaimani

    அறிவியல் உண்மையை அறிய ஆச்சரியம்தான்…!
    ஆராய்ச்சி பூர்வமான உண்மை
    அறிய ஆவல்….!!

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *