BREAKING NEWS:-
Search

டிஜிட்டல் வணிக சந்தையில் இந்தியா முன்னேற்றம்

இந்தியாவில் டிஜிட்டல் வணிக சந்தையில் முன்னேற்றமடைந்து வருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. அளவுக்கதிகமான மொபைல் சாதனங்களின்  பயன்பாட்டாலும் பயனர்கள் அதிகமாக  இணையத்தை பயன்படுத்துவதாலும் டிஜிட்டல் சந்தையில்  $42 பில்லியனாக  உள்ள இந்தியாவின் வளர்ச்சி 2017-ல் $128 பில்லியனைத் தொடும் என்று கூறுகிறார்கள்.

சமீபகாலமாக அதிகரித்துவரும் இணைய தொடர்பு, மக்களைக்  கவரக் கூடிய கைபேசிகள்,  மற்றும் மலிவான விலைகளிலும் தள்ளுபடி போன்றவற்றை வழங்கி வருவதே பெரும்பாலான மக்கள் மின்னணு வணிகவியல் தளத்தை தேடி போவதற்கு முக்கிய காரணமாகும்.

2 (1)

இந்தியாவில் 930 மில்லியன் வயர்லெஸ் சந்தாதாரர்கள் உள்ளனர். இந்தியாவில் 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 235 மில்லியன் பயனர்கள் இருந்தனர்.

சந்தேகத்திற்கு இடமின்றி, மொபைல் விற்பனை தீவிரமாக வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில், மொபைல் சாதனங்கள் வழியாக உலகளாவிய இ-காமர்ஸ் விற்பனை $ 638 பில்லியனை தாண்டும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2010-ல் இந்தியா டிஜிட்டல் வணிக சந்தையில் $ 4.4 பில்லியன் வளர்ச்சியை கொண்டிருந்தது. அது 2014 ல் $ 13.6 பில்லியன் வளர்ச்சியடைந்து நிலையாக வளர்ந்துள்ளது என்று கூறினார்.

3 (1)

2013ல்   இந்தியாவில் இணையவழி கடைக்காரர்கள் 20 மில்லியன்  மக்கள் பங்கு பெற்றிருந்த  நிலையில்  தற்போது 2016 ல் 40 மில்லியனையும் தாண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். மேலும் 200 மில்லியன் இந்தியர்கள்,அடுத்த மூன்று ஆண்டுகளில் ஸ்மார்ட் போன்கள் வழியாக இணையத்தை அணுகுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக  அறிவித்துள்ளனர்.

வரும் ஆண்டுகளில் களமிறங்க உள்ள  தானியங்கு கார்கள், 3D நுட்பங்கள், மேம்படுத்தப்பட்ட சமூக வலை தளங்கள் போன்றவைகளால் மின்னனு வாணிகம் மேலும்  எதிர்பாராததாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://timesofindia.indiatimes.com/tech/tech-news/Digital-commerce-market-in-India-to-touch-128-billion-by-2017/articleshow/50077169.cms

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *