BREAKING NEWS:-
Search

ஜியோ இணைப்புகள் துண்டிக்கப்படும் பணிகள் துவக்கம்..!

இந்தியாவின் தொலைத் தொடர்புத்துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், இந்த மாதம் 15-ஆம் தேதியோடு தனது இலவச இணையம் மட்டும் இலவச அழைப்புகள் வசதியை நிறுத்தியுள்ளது. மீண்டும் இந்த இலவச சேவைகளை பெற, ஜியோ வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஏப்ரல் 15-ஆம் தேதி நிறைவடைந்தும் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களின் இணைப்பை துண்டிக்கும் பணிகளில் தற்போது ஜியோ இறங்கியுள்ளது. சிலருக்கு ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு பிறகும் சில நாட்கள் ஜியோவின் சேவை கிடைத்தன. ஒவ்வொரு பகுதியாக, கட்டணம் செலுத்தா வாடிக்கையாளர்களின் இணைப்பை துண்டித்து வருவதால், சிலருக்கு ஒரிரு நாட்கள் கூடுதலாக சேவை கிடைத்திருக்கலாம் என ஜியோ விளக்கமளித்துள்ளது. ஆனால் நாளையுடன் கண்டிப்பாக கட்டணம் செலுத்தாத அனைத்து வாடிக்கையாளர்களின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டிருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால், ஜியோ நிறுவனம் கணிசமான வாடிக்கையாளர்களை இழக்கலாம். ஆனால் அடுத்தடுத்த மாதங்களில் புதிய சலுகைகளை அறிவித்து, இழந்த வாடிக்கையாளர்களை மீண்டும் பெற முடியும் என ஜியோ நம்புவதாக கூறப்படுகிறது. ஜியோவின் இலவச சேவைகள் நிறைவடைந்துள்ளதை தொடர்ந்து, ஏர்டெல், வோடபோன் போன்ற போட்டி நிறுவனங்கள், ஜியோவை மிஞ்சும் வகையில் பல்வேறு பல சலுகைகளை அளிக்க தயாராகி வருகின்றன.

நன்றி:

http://indianexpress.com/article/technology/mobile-tabs/reliance-jio-starts-disconnecting-services-for-those-who-havent-subscribed-yet-report/




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *